• Nov 17 2024

இராமாயண புராண கதையை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற கைலாய வாகனம் - மாவைக்கந்தன் ஆலயத்தில் வெள்ளோட்டம்

Tharun / Jul 19th 2024, 6:32 pm
image

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் உயரமான கைலாய வாகனம் என கருத்தப்படும் கைலாய வாகனம் சமய அனுட்டானங்கள் கிரியைகளின் பின் கைலாய வாகன வெள்ளோட்டம்  இன்று சிறப்பாக நடைபெற்றது

கைலாய வாகனத்திற்கு சிறப்பு பூசைகள் நடைபெற்று பிராண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கங்கள் ஒலிக்க பக்தர்கள்  வடம்பிடித்து இழுக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன்  திருக்கைலாய வாகனம் மெல்ல மெல்ல வெளி வீதி வலம் வந்தது 

இராவண மன்னன் வீணாகானத்தை இசைப்பது போல முகப்பு தோற்றமும் அடித்தளம் ஆமை வடிவத்தையும் கொண்டதாகவும் முனிவர்கள் தவம் செய்வது போன்ற காட்சிகளும் சர்ப்பங்கங்கள் ஆசிர்வதிதிப்பது போன்ற உருவங்களும் கைலாய வாகனத்தில் காணப்படுகின்றன

முற்றிலும் இராமாயன புராண கதைகை சித்தரிக்க வகையில் கைலாய வாகனம் உருவாக்ப்பட்டுள்ளது

முன்று தாசப்த யுத்தத்தின் பின் மக்கள் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய பின் கோயிலில் காணப்பட்ட கைலாய வாகனம் அழிவடைந்திருந்ததின் காரணமாக இக்கைலாய வாகனம் உருவாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்மன் வீதி பண்டத்தரிப்பை சேர்ந்த சிற்பாசாரி கதிர்காமநாதன் கதிர்றஞ்சனினால்   இக்கைலாய வாகனம் ஒரு வருட கால முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டது.

இலங்கையில் மிக உயரமான கைலாய வாகனமாக இது கருதப்படுபதாக சிற்பாசாரி கருத்து கூறினார்

இலங்கையில் 09 கைலாய வாகனங்கையும் சுவிஸ் நாட்டில் ஒரு கைலாய வாகனத்தையும் இவர் உருவாக்கியவர்.

இந்த கைலாய வாகனமானது மாவை கந்தனின் கைலாய வாகனத் திருவிழாவில், மாவைக்கந்தன் வள்ளி தெய்வானை  அடங்கிய முப்பெரும் சக்திகளை சுமந்து வெளிவீதி உலா வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராமாயண புராண கதையை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற கைலாய வாகனம் - மாவைக்கந்தன் ஆலயத்தில் வெள்ளோட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் உயரமான கைலாய வாகனம் என கருத்தப்படும் கைலாய வாகனம் சமய அனுட்டானங்கள் கிரியைகளின் பின் கைலாய வாகன வெள்ளோட்டம்  இன்று சிறப்பாக நடைபெற்றதுகைலாய வாகனத்திற்கு சிறப்பு பூசைகள் நடைபெற்று பிராண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கங்கள் ஒலிக்க பக்தர்கள்  வடம்பிடித்து இழுக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன்  திருக்கைலாய வாகனம் மெல்ல மெல்ல வெளி வீதி வலம் வந்தது இராவண மன்னன் வீணாகானத்தை இசைப்பது போல முகப்பு தோற்றமும் அடித்தளம் ஆமை வடிவத்தையும் கொண்டதாகவும் முனிவர்கள் தவம் செய்வது போன்ற காட்சிகளும் சர்ப்பங்கங்கள் ஆசிர்வதிதிப்பது போன்ற உருவங்களும் கைலாய வாகனத்தில் காணப்படுகின்றனமுற்றிலும் இராமாயன புராண கதைகை சித்தரிக்க வகையில் கைலாய வாகனம் உருவாக்ப்பட்டுள்ளதுமுன்று தாசப்த யுத்தத்தின் பின் மக்கள் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய பின் கோயிலில் காணப்பட்ட கைலாய வாகனம் அழிவடைந்திருந்ததின் காரணமாக இக்கைலாய வாகனம் உருவாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.அம்மன் வீதி பண்டத்தரிப்பை சேர்ந்த சிற்பாசாரி கதிர்காமநாதன் கதிர்றஞ்சனினால்   இக்கைலாய வாகனம் ஒரு வருட கால முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டது.இலங்கையில் மிக உயரமான கைலாய வாகனமாக இது கருதப்படுபதாக சிற்பாசாரி கருத்து கூறினார்இலங்கையில் 09 கைலாய வாகனங்கையும் சுவிஸ் நாட்டில் ஒரு கைலாய வாகனத்தையும் இவர் உருவாக்கியவர்.இந்த கைலாய வாகனமானது மாவை கந்தனின் கைலாய வாகனத் திருவிழாவில், மாவைக்கந்தன் வள்ளி தெய்வானை  அடங்கிய முப்பெரும் சக்திகளை சுமந்து வெளிவீதி உலா வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement