• May 19 2024

களுத்துறை பாடசாலை மாணவியின் உயிரிழப்பு - பிரதான சந்தேகநபர் செய்த மற்றுமொரு மோசடி அம்பலம்! samugammedia

Tamil nila / May 12th 2023, 6:25 am
image

Advertisement

களுத்துறையில் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் யக்கல பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் வாடகைக்கு வழங்கப்படும் இடத்தில் இருந்து வெள்ளை நிற அக்வா ரக காரை வாடகை அடிப்படையில் எடுத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.  

இதன் பின்னர் சந்தேகநபர் வயங்கொடை பகுதியில் அமைந்துள்ள கார் விற்பனை நிலையத்திற்கு குறித்த காரை மோசடியான முறையில் விற்பனை செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்காக கம்பஹா விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீண்ட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகியிருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், களுத்துறை பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், வாகன மோசடி தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை பாடசாலை மாணவியின் உயிரிழப்பு - பிரதான சந்தேகநபர் செய்த மற்றுமொரு மோசடி அம்பலம் samugammedia களுத்துறையில் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் யக்கல பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் வாடகைக்கு வழங்கப்படும் இடத்தில் இருந்து வெள்ளை நிற அக்வா ரக காரை வாடகை அடிப்படையில் எடுத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.  இதன் பின்னர் சந்தேகநபர் வயங்கொடை பகுதியில் அமைந்துள்ள கார் விற்பனை நிலையத்திற்கு குறித்த காரை மோசடியான முறையில் விற்பனை செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்காக கம்பஹா விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீண்ட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகியிருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.இந்நிலையில், களுத்துறை பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், வாகன மோசடி தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement