• May 09 2024

ஆஸ்கர் விருதுக்கு தெரிவான கமலின் ஏழு படங்கள்!! அசத்தும் கமல்!!

crownson / Dec 14th 2022, 10:19 am
image

Advertisement

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் வருடந்தோறும் இந்தியப் படம் ஒன்று ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெறும்.

துரதிர்ஷ்டவசமாக எந்த இந்தியப் படமும் அந்த விருதை பெறவில்லை.

அமீர்கானின் லகான் இறுதிச்சுற்றுவரை சென்று வெளியேறியது. பெரும்பாலும் முதல் சுற்றிலேயே இந்தியப் படங்கள் தெறித்துவிடும்.

இந்திய திரை நட்சத்திரங்களில், கமல் நடித்தப் படங்களே அதிகமுறை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கமல் நடித்த 7 திரைப்படங்கள் அந்தப் பெருமையை பெற்றுள்ளன.

1. சாகர் (இந்தி - 1985): 80களின் ஆரம்பத்திலிருந்து கமல் அதிகளவில் இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1985 ரமேஷ் சிப்பி இயக்கத்தில் ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியாவுடன் சாகர் திரைப்படத்தில் நடித்தார். ஜவேத் அக்தர் கதை, திரைக்கதை எழுதிய இந்தப் படத்துக்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்திருந்தார்.

படம் மெகா வெற்றியை பெற்றது. இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

2. சுவாதி முத்யம் (தெலுங்கு - 1986): 1986 இல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் சுவாதி முத்யம் தெலுங்குப் படத்தில் கமல் நடித்தார்.

உடன் நடித்தவர் ராதிகா. கமலின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய சுவாதி முத்யம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் மெகா ஹிட்டான இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

3. நாயகன் (தமிழ் - 1987): 1985, 1986 வருடங்களைத் தொடர்ந்து, 1987 ஆம் ஆண்டும் கமல் நடித்த நாயகன் படமே இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மணிரத்னம் இயக்கிய நாயகன்  100 நாள்களை கடந்தது.

4. தேவர் மகன் (தமிழ் - 1992): கமலின் பிளாக் பஸ்டர் திரைப்படமான தேவர் மகன் அதன் திரைக்கதைக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறது.

1992 இல் வெளியான இந்தப் படத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். சிவாஜியின் கம்பீரமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.

இந்தப் படமும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பஜிந்துரைக்கப்பட்டது.

5. குருதிப்புனல் (தமிழ் - 1995): கோவிந்த் நிஹால்னி இயக்கிய துரோக்கல் படத்தை கமல் துரோகி என்ற பெயரில் தமிழில் எடுத்தார்.

துரோகி என்ற பெயர் வேண்டாம் என பாலசந்தர் அறிவுறுத்த, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலின் தலைப்பை படத்துக்கு வைத்துக் கொண்டார்.

பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

6. இந்தியன் (தமிழ் - 1996): இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், தற்போதைய சுதந்திர இந்தியாவையும் இணைத்து ஷங்கர் இயக்கிய, ஊழல் ஒழிப்புத் திரைப்படமான இந்தியன் 1996 வெளியானது.

இந்தப் படத்தில் வயதான தோற்றத்தில் கமல் ஊழல்வாதிகளை குத்தி கொலை செய்யும் காட்சிகள் ரசிக்கப்பட்டன. இப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

7. ஹேராம் (தமிழ் - 2000): காந்தியை கொலை செய்த கோட்சேயின் வாழ்க்கைக்கு இணையாக சாகேத்ராம் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்தக்கால மனநிலையை கமல் பிரதிபலித்திருந்தார்.

படம் வெளியாகும் முன்பு காங்கிரஸும், வெளியான பிறகு இந்துத்துவா சக்திகளும் படத்தை எடுத்தனர்.

இந்தப் படமும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.இணையம் இல்லாத 80கள் மற்றும் 90களில் ஒரு நடிகரின் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவதே ஆஸ்கர் விருதுக்கு நிகராகப் பார்க்கப்பட்டது.

கமல் நடித்தப் படங்கள் வரிசையாக ஆஸ்கர் பரிந்துரையைப் பெற, அவரது அன்றைய ரசிகர்கள் அவரை ஆஸ்கர் நாயகன் என்று அழைத்தனர்.

ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக இரு ஆஸ்கர் விருதுகளை வென்று ரஹ்மான் ரியல் ஆஸ்கர் நாயகனானது தனிக்கதை.

ஆஸ்கர் விருதுக்கு தெரிவான கமலின் ஏழு படங்கள் அசத்தும் கமல் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் வருடந்தோறும் இந்தியப் படம் ஒன்று ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெறும்.துரதிர்ஷ்டவசமாக எந்த இந்தியப் படமும் அந்த விருதை பெறவில்லை. அமீர்கானின் லகான் இறுதிச்சுற்றுவரை சென்று வெளியேறியது. பெரும்பாலும் முதல் சுற்றிலேயே இந்தியப் படங்கள் தெறித்துவிடும்.இந்திய திரை நட்சத்திரங்களில், கமல் நடித்தப் படங்களே அதிகமுறை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கமல் நடித்த 7 திரைப்படங்கள் அந்தப் பெருமையை பெற்றுள்ளன.1. சாகர் (இந்தி - 1985): 80களின் ஆரம்பத்திலிருந்து கமல் அதிகளவில் இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1985 ரமேஷ் சிப்பி இயக்கத்தில் ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியாவுடன் சாகர் திரைப்படத்தில் நடித்தார். ஜவேத் அக்தர் கதை, திரைக்கதை எழுதிய இந்தப் படத்துக்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்திருந்தார். படம் மெகா வெற்றியை பெற்றது. இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.2. சுவாதி முத்யம் (தெலுங்கு - 1986): 1986 இல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் சுவாதி முத்யம் தெலுங்குப் படத்தில் கமல் நடித்தார். உடன் நடித்தவர் ராதிகா. கமலின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய சுவாதி முத்யம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் மெகா ஹிட்டான இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.3. நாயகன் (தமிழ் - 1987): 1985, 1986 வருடங்களைத் தொடர்ந்து, 1987 ஆம் ஆண்டும் கமல் நடித்த நாயகன் படமே இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய நாயகன்  100 நாள்களை கடந்தது.4. தேவர் மகன் (தமிழ் - 1992): கமலின் பிளாக் பஸ்டர் திரைப்படமான தேவர் மகன் அதன் திரைக்கதைக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறது. 1992 இல் வெளியான இந்தப் படத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். சிவாஜியின் கம்பீரமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. இந்தப் படமும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பஜிந்துரைக்கப்பட்டது.5. குருதிப்புனல் (தமிழ் - 1995): கோவிந்த் நிஹால்னி இயக்கிய துரோக்கல் படத்தை கமல் துரோகி என்ற பெயரில் தமிழில் எடுத்தார். துரோகி என்ற பெயர் வேண்டாம் என பாலசந்தர் அறிவுறுத்த, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலின் தலைப்பை படத்துக்கு வைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.6. இந்தியன் (தமிழ் - 1996): இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், தற்போதைய சுதந்திர இந்தியாவையும் இணைத்து ஷங்கர் இயக்கிய, ஊழல் ஒழிப்புத் திரைப்படமான இந்தியன் 1996 வெளியானது. இந்தப் படத்தில் வயதான தோற்றத்தில் கமல் ஊழல்வாதிகளை குத்தி கொலை செய்யும் காட்சிகள் ரசிக்கப்பட்டன. இப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.7. ஹேராம் (தமிழ் - 2000): காந்தியை கொலை செய்த கோட்சேயின் வாழ்க்கைக்கு இணையாக சாகேத்ராம் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்தக்கால மனநிலையை கமல் பிரதிபலித்திருந்தார். படம் வெளியாகும் முன்பு காங்கிரஸும், வெளியான பிறகு இந்துத்துவா சக்திகளும் படத்தை எடுத்தனர். இந்தப் படமும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.இணையம் இல்லாத 80கள் மற்றும் 90களில் ஒரு நடிகரின் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவதே ஆஸ்கர் விருதுக்கு நிகராகப் பார்க்கப்பட்டது. கமல் நடித்தப் படங்கள் வரிசையாக ஆஸ்கர் பரிந்துரையைப் பெற, அவரது அன்றைய ரசிகர்கள் அவரை ஆஸ்கர் நாயகன் என்று அழைத்தனர். ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக இரு ஆஸ்கர் விருதுகளை வென்று ரஹ்மான் ரியல் ஆஸ்கர் நாயகனானது தனிக்கதை.

Advertisement

Advertisement

Advertisement