• May 04 2024

காங்கேசன்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் - வடக்கு ஆளுநர் உறுதி

Chithra / Jan 7th 2023, 4:19 pm
image

Advertisement

காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

காங்கேசன்துறை முகத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு மட்டத்தில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வந்த அமைச்சின் செயலாளர் மற்றும் சுங்கத் திணைகள் அதிகாரிகள் காங்கேசன் துறை முகத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்பு என்னோடு கலந்துரையாடினர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளில் வடக்கு மாகாண சபை எவ்வாறான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடினோம்.

இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவு படுத்தினர்.

முதற்கட்டமாக இறங்குதுறை மற்றும் சுங்கத்திணைக்கள கட்டுமானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்ததுடன் எதிர்வரும் மாதங்களில் குறித்த திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.


காங்கேசன்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் - வடக்கு ஆளுநர் உறுதி காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.இன்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கேசன்துறை முகத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு மட்டத்தில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வந்த அமைச்சின் செயலாளர் மற்றும் சுங்கத் திணைகள் அதிகாரிகள் காங்கேசன் துறை முகத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்பு என்னோடு கலந்துரையாடினர்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளில் வடக்கு மாகாண சபை எவ்வாறான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடினோம்.இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவு படுத்தினர்.முதற்கட்டமாக இறங்குதுறை மற்றும் சுங்கத்திணைக்கள கட்டுமானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்ததுடன் எதிர்வரும் மாதங்களில் குறித்த திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement