• Nov 26 2024

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு..!!

Tamil nila / May 13th 2024, 7:19 pm
image

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று  தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 


வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி  அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.



குறித்த ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு முன்பாக கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றமை வழமையாகும்.



அதற்கமைய இம்முறையும், கடல் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பானையில் இடப்பட்டு அதன்பின்னர் உப்பு நீர் விளக்கு எரியவிடப்படும்.



குறித்த விளக்கு தொடர்ந்து எரிய விடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.


அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை (20) அதிகாலை, இந்த உவர் நீர் விளக்கானது மடைப் பண்டங்களுடன் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னரே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு. வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று  தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி  அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.குறித்த ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு முன்பாக கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றமை வழமையாகும்.அதற்கமைய இம்முறையும், கடல் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பானையில் இடப்பட்டு அதன்பின்னர் உப்பு நீர் விளக்கு எரியவிடப்படும்.குறித்த விளக்கு தொடர்ந்து எரிய விடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை (20) அதிகாலை, இந்த உவர் நீர் விளக்கானது மடைப் பண்டங்களுடன் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னரே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement