• Jul 09 2025

யாழ்.இந்தியத் துணைத்தூதரை சந்தித்த காரைநகர் பிரதேசசபையினர்!

shanuja / Jul 8th 2025, 9:45 am
image

யாழ்.இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்றையதினம் (07) இடம்பெற்றது.


இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 


காரைநகர் பிரதேசசபையினர் முன்வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு யாழ.இந்தியத் துணைத்தூதுவர் இணக்கம்  தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

யாழ்.இந்தியத் துணைத்தூதரை சந்தித்த காரைநகர் பிரதேசசபையினர் யாழ்.இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்றையதினம் (07) இடம்பெற்றது.இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. காரைநகர் பிரதேசசபையினர் முன்வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு யாழ.இந்தியத் துணைத்தூதுவர் இணக்கம்  தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement