• May 08 2024

கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - 4,900 பக்தர்கள் பங்கேற்பு! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 9:42 am
image

Advertisement

கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை 4 மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இம்முறை வருடாந்த கச்சை தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதுவராலயம், இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று (04) காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இதன் பொழுது 60 நாட்டு படகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2,100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 உம் அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5,100 பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - 4,900 பக்தர்கள் பங்கேற்பு SamugamMedia கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை 4 மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.இம்முறை வருடாந்த கச்சை தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை, இந்திய துணை தூதுவராலயம், இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.இன்று (04) காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.இதன் பொழுது 60 நாட்டு படகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2,100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 உம் அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5,100 பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement