• Jul 07 2024

கச்சதீவு திருவிழா - இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்! - இந்திய பங்குதந்தை கருத்து!

Chithra / Jan 31st 2023, 11:45 am
image

Advertisement

இந்தியா மற்றும் இலங்கையின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா  ஒரு பாலமாக அமைந்துள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன் வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில் விழா ஒருங்கிணைப்பு குழுவினர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சந்தித்து விழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இருக்கின்றனர். 

மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனு கோரப்பட்டுள்ளது.

கச்சத்தீவு கடற்கரையில் வெயிலில் மக்கள் வாடாமல் இருப்பதற்கு பந்தல் மற்றும் உணவுகள் இந்திய தூதரகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கச்சதீவு திருவிழா - இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் - இந்திய பங்குதந்தை கருத்து இந்தியா மற்றும் இலங்கையின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா  ஒரு பாலமாக அமைந்துள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன் வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில் விழா ஒருங்கிணைப்பு குழுவினர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சந்தித்து விழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இருக்கின்றனர். மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனு கோரப்பட்டுள்ளது.கச்சத்தீவு கடற்கரையில் வெயிலில் மக்கள் வாடாமல் இருப்பதற்கு பந்தல் மற்றும் உணவுகள் இந்திய தூதரகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement