• May 17 2024

உள்ளூர் இழுவைமடி தொழிலால் வாழ்வாதாரத்தை இழக்கும் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் கையளிப்பு samugammedia

Chithra / Jun 26th 2023, 10:07 pm
image

Advertisement

தடைசெய்யப்பட்ட உள்ளூர் இழுவைமடி தொழிலை சட்டத்திற்குட்பட்ட அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கி அனுமதிப்பதை கடற்றொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல்வளத்தையும் அழிக்கும் செயற்பாடு, இதனை விரைந்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரச அதிபர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர்,  கடற்றொழில் நீரியல் வள திணைக்க பணிப்பாளர் ஆகியோருக்கு ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்களால் இன்றைய தினம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்பிரதேசத்தில் சட்டத்துக்கு புறம்பாக வெளியூர் இழுவை படகுகள் தரித்து நின்று தொழில் ஈடுபடுவதால் ஊர்காவற்றுரை பிரதேச மீனவ சமூகமும் கடும் பொருளாதார பாதிப்பை எதிர்நோக்குவதோடு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படும் செயற்பாடு நீண்ட காலமாக தொடர்கிறது.

இது குறித்து கடற்றொழில் நீரியல் வனத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த வகைளில் '2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடற்றொழில் நீர் வாழ் உயிரின வனங்கள் (திருத்தம்) சட்டம் உள்ளூர் இழுவைப் படகுகளை தடை செய்யும் நிலையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சட்ட விரோதமாக இழுவைப் படகுகளின் செயற்பாடு தொடர்கின்றது.

ஆகவே வடக்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் என்ற வகையில் மேற்குறித்த சட்டத்தை வடக்கு  மாகாணத்தில் விரைந்து அமுல்ப்படுவதன் மூலம் ஊர்காவற்றுறை பிரதேச கடற்பரப்பில் இருந்து இழுவை படகுகளை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மீனவ சமூகங்கள் சார்ப்பில் கோருகின்றோம்.- என்றுள்ளது.


உள்ளூர் இழுவைமடி தொழிலால் வாழ்வாதாரத்தை இழக்கும் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் கையளிப்பு samugammedia தடைசெய்யப்பட்ட உள்ளூர் இழுவைமடி தொழிலை சட்டத்திற்குட்பட்ட அரச அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கி அனுமதிப்பதை கடற்றொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல்வளத்தையும் அழிக்கும் செயற்பாடு, இதனை விரைந்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரச அதிபர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர்,  கடற்றொழில் நீரியல் வள திணைக்க பணிப்பாளர் ஆகியோருக்கு ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்களால் இன்றைய தினம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்பிரதேசத்தில் சட்டத்துக்கு புறம்பாக வெளியூர் இழுவை படகுகள் தரித்து நின்று தொழில் ஈடுபடுவதால் ஊர்காவற்றுரை பிரதேச மீனவ சமூகமும் கடும் பொருளாதார பாதிப்பை எதிர்நோக்குவதோடு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படும் செயற்பாடு நீண்ட காலமாக தொடர்கிறது.இது குறித்து கடற்றொழில் நீரியல் வனத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அந்த வகைளில் '2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடற்றொழில் நீர் வாழ் உயிரின வனங்கள் (திருத்தம்) சட்டம் உள்ளூர் இழுவைப் படகுகளை தடை செய்யும் நிலையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சட்ட விரோதமாக இழுவைப் படகுகளின் செயற்பாடு தொடர்கின்றது.ஆகவே வடக்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் என்ற வகையில் மேற்குறித்த சட்டத்தை வடக்கு  மாகாணத்தில் விரைந்து அமுல்ப்படுவதன் மூலம் ஊர்காவற்றுறை பிரதேச கடற்பரப்பில் இருந்து இழுவை படகுகளை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மீனவ சமூகங்கள் சார்ப்பில் கோருகின்றோம்.- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement