சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில்,
கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்தார் கெஹலிய ரம்புக்வெல்ல. சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.இந்நிலையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.