• Mar 04 2025

மன்னாரில் பல இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா பொதி மீட்பு..!

Sharmi / Mar 3rd 2025, 12:38 pm
image

கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார்-சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து  ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றையதினம்(2) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபாலவின் பணிப்பில்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் போதி பக்ஸ என்பவரின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு  தற்காலிக பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரே மேற்படி கைது நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவரிபுரம்,சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு    பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மன்னாரில் பல இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா பொதி மீட்பு. கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார்-சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து  ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் நேற்றையதினம்(2) மாலை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபாலவின் பணிப்பில்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் போதி பக்ஸ என்பவரின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு  தற்காலிக பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினரே மேற்படி கைது நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவரிபுரம்,சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு    பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement