• May 02 2024

முக்கிய அமைச்சர்கள் தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம்! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 11:38 pm
image

Advertisement

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது.


அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 'உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்' பணியை, முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறைச்சாலைவிவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.


முன்னதாக, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷால்க், தென்னாபிரிக்காவிற்கு சென்று அங்கு ஸ்தாபிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் அனுபவத்தைப் பெறுமாறு விசேட இராஜதந்திர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.


இதேவேளை தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை அரசாங்கத்தால், இனவெறி ஆட்சியின் போது கடத்தல்கள், கொலைகள் மற்றும் சித்திரவதைகள் உட்பட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அமைச்சர்கள் தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம் SamugamMedia நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது.அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 'உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்' பணியை, முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறைச்சாலைவிவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.முன்னதாக, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷால்க், தென்னாபிரிக்காவிற்கு சென்று அங்கு ஸ்தாபிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் அனுபவத்தைப் பெறுமாறு விசேட இராஜதந்திர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.இதேவேளை தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை அரசாங்கத்தால், இனவெறி ஆட்சியின் போது கடத்தல்கள், கொலைகள் மற்றும் சித்திரவதைகள் உட்பட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement