• Jun 17 2024

பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற காதி நீதிவான் அதிரடியாக கைது

Chithra / May 26th 2024, 2:17 pm
image

Advertisement

 

விவாகரத்து மற்றும் விவாகரத்து ஆணையை வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 4,500 ரூபா இலஞ்சம் கோரிய, ​​காதி நீதிவான் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த காதி நீதிவான் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஜாஎல்ல கும்பக்கடுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி காதி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களால் காதி நீதிமன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நீதிவான் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற காதி நீதிவான் அதிரடியாக கைது  விவாகரத்து மற்றும் விவாகரத்து ஆணையை வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 4,500 ரூபா இலஞ்சம் கோரிய, ​​காதி நீதிவான் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த காதி நீதிவான் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ராஜாஎல்ல கும்பக்கடுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி காதி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களால் காதி நீதிமன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நீதிவான் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement