• Jun 17 2024

சிறப்பு ரயில் சேவைகள் இரத்து..! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / May 26th 2024, 1:38 pm
image

Advertisement


இந்த நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக,  மலையக ரயில் தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து  வீழ்ந்துள்ளமையினால் சில இரவு நேர ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் இயங்கும் இரவு நேர சிறப்பு ரயில்கள் இன்று (26) மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏனைய ரயில்கள் இன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு இன்று கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த ரயில் வலக்கும்புர பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக 4 ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என   திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிறப்பு ரயில் சேவைகள் இரத்து. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு இந்த நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக,  மலையக ரயில் தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து  வீழ்ந்துள்ளமையினால் சில இரவு நேர ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.கொழும்பு மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் இயங்கும் இரவு நேர சிறப்பு ரயில்கள் இன்று (26) மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏனைய ரயில்கள் இன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.அத்தோடு இன்று கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த ரயில் வலக்கும்புர பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக 4 ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என   திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement