• Jul 27 2024

சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி...!samugammedia

Anaath / Nov 5th 2023, 6:43 pm
image

Advertisement

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி இன்று இடம்பெறும் நிலையில் குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியின் போதே அதிகபடியாக, விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

குறித்த போட்டியில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற 49ஆவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இதே வேளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை பெற்றிருந்தார்.

இந்தநிலையில், இன்றைய தினம் விராட் கோலி பெற்ற சதத்துடன், சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அத்துடன், இந்திய அணிசார்பில் ஸ்ரேயாஷ் ஐயர் 77 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 

சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி.samugammedia உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி இன்று இடம்பெறும் நிலையில் குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியின் போதே அதிகபடியாக, விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.குறித்த போட்டியில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற 49ஆவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த இதே வேளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை பெற்றிருந்தார்.இந்தநிலையில், இன்றைய தினம் விராட் கோலி பெற்ற சதத்துடன், சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.அத்துடன், இந்திய அணிசார்பில் ஸ்ரேயாஷ் ஐயர் 77 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement