• Apr 08 2025

போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்

Chithra / Apr 7th 2025, 11:37 am
image

 

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர், கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில்  தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய உயிரிழப்புக்கு குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் காரணம் என தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தே குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 

இது திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.


போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்  கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர், கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில்  தற்கொலை செய்து கொண்டார்.அவருடைய உயிரிழப்புக்கு குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் காரணம் என தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தே குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இது திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement