கிண்ணியா நகர சபை ஊழியர்கள் தங்களுடைய மே மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி, இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு இணங்க, மே மாதம் 23 திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டிய நாளாகும். ஆனால் இன்றைய தினம் (27) வரை சம்பளம் வழங்கப்படவில்லை என இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி தான் கடைசியாக நாங்கள் சம்பளம் பெற்றோம். இறுதியாக இன்றுடன் 45 நாட்கள் சென்று விட்டன. இந்த நிலையில், எங்களுடைய வாழ்க்கைச் செலவுகளை எப்படி நாங்கள் சமாளிப்பது? என இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு ஊழியர்குரிய 80 வீதமான சம்பளத்தைதான் திறைசேரி ஒதுக்கி இருந்தது என்றும் மீதி 20 வீதமானதை உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், போதுமான வருமானம் கிண்ணியா நகர சபைக்கு இல்லாததன் காரணமாக, சம்பளம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலுவலக ஊழியர்கள் கடமைக்குச் செல்லாததன் காரணமாக, நகர சபை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதோடு, சேவையை நாடி வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இன்றைய தினம் சுகாதார ஊழியர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதித்திருந்ததால், வீதிகளில் கழிவுகள் நிறைந்து, கிடைப்பதை காணக்கூடியதாக இருந்தது.
சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு கோரி போராட்டத்தில் குதித்த கிண்ணியா நகர சபை ஊழியர்கள் கிண்ணியா நகர சபை ஊழியர்கள் தங்களுடைய மே மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி, இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு இணங்க, மே மாதம் 23 திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டிய நாளாகும். ஆனால் இன்றைய தினம் (27) வரை சம்பளம் வழங்கப்படவில்லை என இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி தான் கடைசியாக நாங்கள் சம்பளம் பெற்றோம். இறுதியாக இன்றுடன் 45 நாட்கள் சென்று விட்டன. இந்த நிலையில், எங்களுடைய வாழ்க்கைச் செலவுகளை எப்படி நாங்கள் சமாளிப்பது என இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு ஊழியர்குரிய 80 வீதமான சம்பளத்தைதான் திறைசேரி ஒதுக்கி இருந்தது என்றும் மீதி 20 வீதமானதை உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில், போதுமான வருமானம் கிண்ணியா நகர சபைக்கு இல்லாததன் காரணமாக, சம்பளம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலுவலக ஊழியர்கள் கடமைக்குச் செல்லாததன் காரணமாக, நகர சபை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதோடு, சேவையை நாடி வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.இன்றைய தினம் சுகாதார ஊழியர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதித்திருந்ததால், வீதிகளில் கழிவுகள் நிறைந்து, கிடைப்பதை காணக்கூடியதாக இருந்தது.