• Jan 19 2025

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்; இம்ரான் எம்.பி முக்கிய கோரிக்கை..!

Sharmi / Jan 15th 2025, 3:59 pm
image

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. 

இதன்போது, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1-கிண்ணியா மகளிர் கல்லூரிக்கும் பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலைக்கும் அருகில் இருக்கும் டெலிக்கொம் கோபுரத்தை மக்கள் செறிவு குறைந்த இடத்துக்கு மாற்றி அந்த காணியை கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு பெற்று கொடுத்தல்.

2-கச்சக்கொடுத்தீவில் உள்ள ஆரம்ப சுகதார பராமரிப்பு நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துதல். 3-ஆயிலடியில் ஆரம்ப சுகதார பராமரிப்பு நிலையம் அமைத்தல்.

4-வெள்ளங்குளம் சுகதார நிலையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் நடமாடும் வைத்திய சேவையினை நடாத்துதல்.

5-அறுவடை காலம் ஆரம்பித்துள்ளதால் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள வயலுக்கு செல்லும் பாதைகளை தற்காலிகமாக செப்பனிடுதல் என்பன  கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.

குறித்த கூட்டத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமசந்திரா , இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச் முகம்மது கனி, திணைக்கள பொறுப்பதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்; இம்ரான் எம்.பி முக்கிய கோரிக்கை. திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.  இதன்போது, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1-கிண்ணியா மகளிர் கல்லூரிக்கும் பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலைக்கும் அருகில் இருக்கும் டெலிக்கொம் கோபுரத்தை மக்கள் செறிவு குறைந்த இடத்துக்கு மாற்றி அந்த காணியை கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு பெற்று கொடுத்தல். 2-கச்சக்கொடுத்தீவில் உள்ள ஆரம்ப சுகதார பராமரிப்பு நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துதல். 3-ஆயிலடியில் ஆரம்ப சுகதார பராமரிப்பு நிலையம் அமைத்தல். 4-வெள்ளங்குளம் சுகதார நிலையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் நடமாடும் வைத்திய சேவையினை நடாத்துதல்.5-அறுவடை காலம் ஆரம்பித்துள்ளதால் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள வயலுக்கு செல்லும் பாதைகளை தற்காலிகமாக செப்பனிடுதல் என்பன  கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.குறித்த கூட்டத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமசந்திரா , இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச் முகம்மது கனி, திணைக்கள பொறுப்பதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement