• Nov 28 2024

கோடாலியும் கடப்பாறையுமா சின்னங்கள், இந்தச் சின்னங்களுக்கு வாக்களிக்க முடியுமா - றமணன்

Tharmini / Oct 28th 2024, 4:02 pm
image

கோடாலி, சவல், கடப்பாறை, எருமைமாடு என்று வாக்களிக்க மனம் வராத பயங்கரமான சின்னங்கள் காணப்படுகிறது. எனவே வாக்குகளை வீணாக சிதறடிக்கவேண்டாம் என்று ஜக்கிய மக்கள் கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மு.ரமணன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

எமது மக்கள் அனுபவிக்க வேண்டிய சுகபோகங்களை எல்லாம் இழந்து அதனை பெற்றுக்கொள்ள முடியாது தவிக்கிறார்கள். ஆனால் மக்களை எமாற்றுகின்ற தலைமைகள் வெற்றியை தமதாக்கிக்கொண்டு தமது குடும்பங்களை நல்லநிலையில் வைத்துள்ளதுடன் மக்களை இழிநிலையில் வைத்துள்ளனர். 

எனவே மக்களுக்கான சேவையினை யதார்த்தமான முறையில் உண்மையாக செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் களம் இறங்கியுள்ளேன். மக்கள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். 

இன்று பலகட்சிகளும் சுயேட்சைகுழுக்களும் போட்டியிடுகின்றனர். நாங்கள் காணாத முகங்களும் சின்னங்களும் களத்தில் இறங்கியுள்ளது. ஒருகாலத்தில் சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது பயங்கரமான உருவாங்களை காட்டி உணவை ஊட்டியிருப்போம். 

அது போல சுவரொட்டிகளில்பயங்கரமான சின்னங்கள் உள்ளதை காணலாம். தலை ஒருவிதம், முகம் ஒருவிதம், சின்னங்கள் ஒருவிதம். கோடாலி சவல் கடப்பாறை கங்காரு எருமைமாடு என்று சின்னங்களை பார்த்தாலே வாக்களிக்க மனம் வராது. 

எனவே உங்களது வாக்குகளை சிதறடிக்காதீர்கள், சுயேட்சைகளுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகள் அல்ல. உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாக்குகளும் அவை அல்ல. 

எனவே உங்களுக்கான உண்மையான சேவகனை தெரிவுசெய்யவேண்டுமாக இருந்தால் வன்னியிலே தமிழ்மகனாக நான் சஜித் பிரேமதாசவின் தலைமையில் போட்டியிடுகின்றேன். முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் மனசாட்சிக்கு விரோதமற்ற நேர்மையான சேவையினை இந்த மூன்று மாவட்டங்களுக்கும் செய்வேன். என்றார்.


கோடாலியும் கடப்பாறையுமா சின்னங்கள், இந்தச் சின்னங்களுக்கு வாக்களிக்க முடியுமா - றமணன் கோடாலி, சவல், கடப்பாறை, எருமைமாடு என்று வாக்களிக்க மனம் வராத பயங்கரமான சின்னங்கள் காணப்படுகிறது. எனவே வாக்குகளை வீணாக சிதறடிக்கவேண்டாம் என்று ஜக்கிய மக்கள் கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மு.ரமணன் தெரிவித்தார்.வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.எமது மக்கள் அனுபவிக்க வேண்டிய சுகபோகங்களை எல்லாம் இழந்து அதனை பெற்றுக்கொள்ள முடியாது தவிக்கிறார்கள். ஆனால் மக்களை எமாற்றுகின்ற தலைமைகள் வெற்றியை தமதாக்கிக்கொண்டு தமது குடும்பங்களை நல்லநிலையில் வைத்துள்ளதுடன் மக்களை இழிநிலையில் வைத்துள்ளனர். எனவே மக்களுக்கான சேவையினை யதார்த்தமான முறையில் உண்மையாக செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் களம் இறங்கியுள்ளேன். மக்கள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். இன்று பலகட்சிகளும் சுயேட்சைகுழுக்களும் போட்டியிடுகின்றனர். நாங்கள் காணாத முகங்களும் சின்னங்களும் களத்தில் இறங்கியுள்ளது. ஒருகாலத்தில் சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது பயங்கரமான உருவாங்களை காட்டி உணவை ஊட்டியிருப்போம். அது போல சுவரொட்டிகளில்பயங்கரமான சின்னங்கள் உள்ளதை காணலாம். தலை ஒருவிதம், முகம் ஒருவிதம், சின்னங்கள் ஒருவிதம். கோடாலி சவல் கடப்பாறை கங்காரு எருமைமாடு என்று சின்னங்களை பார்த்தாலே வாக்களிக்க மனம் வராது. எனவே உங்களது வாக்குகளை சிதறடிக்காதீர்கள், சுயேட்சைகளுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகள் அல்ல. உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாக்குகளும் அவை அல்ல. எனவே உங்களுக்கான உண்மையான சேவகனை தெரிவுசெய்யவேண்டுமாக இருந்தால் வன்னியிலே தமிழ்மகனாக நான் சஜித் பிரேமதாசவின் தலைமையில் போட்டியிடுகின்றேன். முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் மனசாட்சிக்கு விரோதமற்ற நேர்மையான சேவையினை இந்த மூன்று மாவட்டங்களுக்கும் செய்வேன். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement