• May 03 2024

கோட்டாவின் கைப்பாவை கவனமாக பேசவேண்டும்..! தேசிய பட்டியல் எம்.பிதானே நீ..! அலிசப்ரிக்கு சாட்டை கொடுத்த சாணக்கியன்.! samugammedia

Sharmi / Jun 8th 2023, 1:54 pm
image

Advertisement

கோட்டாபய ராஜபக்சவின் கைப்பாவையான வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்து தன்மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் தான் இல்லாத சமயம், கோட்டாவின் கைப்பாவையான அலிசப்ரி தன்னை வெளிநாட்டு பிரிவினைவாத கூலிப்படையை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அலிசப்ரிக்கு எதிராக எனக்கு தனிப்பட்ட தகராறு ஒன்றும் இல்லை. இந்த விடயத்தை விவாதிக்கவேண்டும் எனில் அதற்கும் தயாராகவுள்ளேன்.

நேற்றையதினம் நான் சபையில் உரையாற்றும் போது அலிசப்ரிக்கு உரித்தான வீடு ஒன்று அதாவது வெளிவிவகார அமைச்சுக்கு உரித்தான வீட்டினை கோட்டாவிற்கு வழங்கப்பட்டதாக பத்திரிகையில் இருந்த செய்தியே தெரிவித்தேன்.

இன்று காலை டெய்லிமிறர் பத்திரிகையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை வாசிப்பதற்கு சபை அனுமதி வழங்கவேண்டும்.

சொல்லப்பட்ட இந்த ஆடம்பரவீடு  கொழும்பு 07 இல் அமைந்துள்ளது.அது வெளிவிவகார அமைச்சுக்கு சொந்தமானது.இந்த வீட்டை கோட்டாவிற்கு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

மலலசேகர மாவத்தையில் உள்ள கோட்டாவின் இல்லத்தில் சத்தம் அதிகமாக உள்ளதாக கூறி வெளிவிவகார அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் அது கோட்டாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தின் உண்மைத்தன்மை இவ்வாறு இருக்க இன்று காலை சபைக்கு வந்த கோட்டாவின் கைப்பாவையாக அலிசப்ரி என்னை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதற்கு சபை இடமளிக்ககூடாது. இந்த கோட்டாவின் கைப்பாவை நாடாளுமன்றத்தில் பேசும் போது உரிய முறையில் பேசவேண்டும் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கோட்டாவின் கைப்பாவை கவனமாக பேசவேண்டும். தேசிய பட்டியல் எம்.பிதானே நீ. அலிசப்ரிக்கு சாட்டை கொடுத்த சாணக்கியன். samugammedia கோட்டாபய ராஜபக்சவின் கைப்பாவையான வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்து தன்மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்துள்ளார்.இன்று காலை நாடாளுமன்றத்தில் தான் இல்லாத சமயம், கோட்டாவின் கைப்பாவையான அலிசப்ரி தன்னை வெளிநாட்டு பிரிவினைவாத கூலிப்படையை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.அலிசப்ரிக்கு எதிராக எனக்கு தனிப்பட்ட தகராறு ஒன்றும் இல்லை. இந்த விடயத்தை விவாதிக்கவேண்டும் எனில் அதற்கும் தயாராகவுள்ளேன்.நேற்றையதினம் நான் சபையில் உரையாற்றும் போது அலிசப்ரிக்கு உரித்தான வீடு ஒன்று அதாவது வெளிவிவகார அமைச்சுக்கு உரித்தான வீட்டினை கோட்டாவிற்கு வழங்கப்பட்டதாக பத்திரிகையில் இருந்த செய்தியே தெரிவித்தேன்.இன்று காலை டெய்லிமிறர் பத்திரிகையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை வாசிப்பதற்கு சபை அனுமதி வழங்கவேண்டும்.சொல்லப்பட்ட இந்த ஆடம்பரவீடு  கொழும்பு 07 இல் அமைந்துள்ளது.அது வெளிவிவகார அமைச்சுக்கு சொந்தமானது.இந்த வீட்டை கோட்டாவிற்கு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.மலலசேகர மாவத்தையில் உள்ள கோட்டாவின் இல்லத்தில் சத்தம் அதிகமாக உள்ளதாக கூறி வெளிவிவகார அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் அது கோட்டாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தின் உண்மைத்தன்மை இவ்வாறு இருக்க இன்று காலை சபைக்கு வந்த கோட்டாவின் கைப்பாவையாக அலிசப்ரி என்னை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதற்கு சபை இடமளிக்ககூடாது. இந்த கோட்டாவின் கைப்பாவை நாடாளுமன்றத்தில் பேசும் போது உரிய முறையில் பேசவேண்டும் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement