• Sep 21 2024

குருந்தூர்மலை காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம்! SamugamMedia

Tamil nila / Feb 23rd 2023, 7:53 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களின் வாழ்விட காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றமைக்கு எதிராகவும் குறித்த வாழ்விட காணிகளில் வனவளத் திணைக்களத்தினரும் தமது அடையாளப்படுத்தல்களை செய்து வைத்து தமது மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பது தொடர்பிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



 இந்நிலையில் தொடர்ச்சியாக குருந்தூர்மலை பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த மத திணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு விகாரை அமைக்கப்படுகின்ற பணிகளுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மலை அடிவாரத்தைச் சூழ சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் தங்களுடைய எல்லையாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது,



இதனால் மக்கள் தங்களுடைய குடியிருப்பு காணிகள் மாத்திரமன்றி வயல் நிலங்களையும் இழந்து நிற்கதியாகிய நிலையில் காணப்படுகின்றனர். 


கடந்த 1984 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் 2009 ஆம் ஆண்டின் பின்னர் கடந்த 13 வருடங்களாக இன்று வரை தண்ணிமுறிப்பு கிராமத்தில், குறிப்பாக இந்த குருந்தூர் மலையை அண்மித்த பகுதியாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு கிராமத்தினுடைய பூர்விக இடங்களில் குடியேற முடியாமலும் அங்கே இருந்த பாடசாலை மற்றும் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட ஏனையவைகளும் அந்த இடத்திலேயே இயங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது. 



இவ்வாறான, பின்னணியில் இவர்களுடைய பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் அபகரித்து வைத்திருக்கின்றனர்.


குறிப்பாக இந்த விடயங்கள் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்த நிலையில், அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற அதிபர் தலைமையிலான கலந்துரையாடலில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னணியில் இன்னும் ஐந்து ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்குவதற்காக அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்தது.   




கடந்த 1933 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டு குருந்தூர் மலை பகுதியில் தொல்பொருள் இடமாக 78 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக மேலும், ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினத்தில் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.


இதன்போது குறித்த இடத்தில் ஒன்று கூடிய கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மக்களை மீள் குடியேற்றம் செய்யாமல் இந்த காணிகளை அளவிட்டு மேலும் திணைக்களத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள் தாங்கள் இந்த ஐந்து ஏக்கர் காணியை அளந்து தொல்லியல் திணைக்களத்திடம் வழங்கி மீதி காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்தும் விடுவித்து மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.


இருப்பினும், தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்படுவதன் விளைவாக இது நடைபெறப் போவதில்லை. மீண்டும் நீங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அந்த காணிகளை அவர்களுக்கு வழங்குவதற்கே முன்வருகின்றீர்கள். எங்களுடைய நிலங்களில் எங்களை மீள் குடியேற்றம் செய்த பின்னர் அவர்களுக்கான காணி அளவீடு பணிகளை மேற்கொள்ளுமாறும் இரண்டு திணைக்களங்களில் இருந்தும் எங்களுடைய இடங்களை விடுவித்து நாங்கள் குடியேறியதன் பின்னர் நீங்கள் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய மீதியிடங்களை அடையாளப்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். 


இந்நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக கோரிய தொல்பொருள் திணைகள அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தராத நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் அனைவரும் மக்களுடைய கருத்துக்களை ஏற்று அளவீட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த இடத்திலிருந்து சென்றனர்.

குருந்தூர்மலை காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம் SamugamMedia முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களின் வாழ்விட காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றமைக்கு எதிராகவும் குறித்த வாழ்விட காணிகளில் வனவளத் திணைக்களத்தினரும் தமது அடையாளப்படுத்தல்களை செய்து வைத்து தமது மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பது தொடர்பிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர்ச்சியாக குருந்தூர்மலை பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த மத திணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு விகாரை அமைக்கப்படுகின்ற பணிகளுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மலை அடிவாரத்தைச் சூழ சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் தங்களுடைய எல்லையாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது,இதனால் மக்கள் தங்களுடைய குடியிருப்பு காணிகள் மாத்திரமன்றி வயல் நிலங்களையும் இழந்து நிற்கதியாகிய நிலையில் காணப்படுகின்றனர். கடந்த 1984 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் 2009 ஆம் ஆண்டின் பின்னர் கடந்த 13 வருடங்களாக இன்று வரை தண்ணிமுறிப்பு கிராமத்தில், குறிப்பாக இந்த குருந்தூர் மலையை அண்மித்த பகுதியாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு கிராமத்தினுடைய பூர்விக இடங்களில் குடியேற முடியாமலும் அங்கே இருந்த பாடசாலை மற்றும் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட ஏனையவைகளும் அந்த இடத்திலேயே இயங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான, பின்னணியில் இவர்களுடைய பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் அபகரித்து வைத்திருக்கின்றனர்.குறிப்பாக இந்த விடயங்கள் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்த நிலையில், அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற அதிபர் தலைமையிலான கலந்துரையாடலில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னணியில் இன்னும் ஐந்து ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்குவதற்காக அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்தது.   கடந்த 1933 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டு குருந்தூர் மலை பகுதியில் தொல்பொருள் இடமாக 78 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக மேலும், ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினத்தில் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.இதன்போது குறித்த இடத்தில் ஒன்று கூடிய கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மக்களை மீள் குடியேற்றம் செய்யாமல் இந்த காணிகளை அளவிட்டு மேலும் திணைக்களத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள் தாங்கள் இந்த ஐந்து ஏக்கர் காணியை அளந்து தொல்லியல் திணைக்களத்திடம் வழங்கி மீதி காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்தும் விடுவித்து மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.இருப்பினும், தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்படுவதன் விளைவாக இது நடைபெறப் போவதில்லை. மீண்டும் நீங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அந்த காணிகளை அவர்களுக்கு வழங்குவதற்கே முன்வருகின்றீர்கள். எங்களுடைய நிலங்களில் எங்களை மீள் குடியேற்றம் செய்த பின்னர் அவர்களுக்கான காணி அளவீடு பணிகளை மேற்கொள்ளுமாறும் இரண்டு திணைக்களங்களில் இருந்தும் எங்களுடைய இடங்களை விடுவித்து நாங்கள் குடியேறியதன் பின்னர் நீங்கள் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய மீதியிடங்களை அடையாளப்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக கோரிய தொல்பொருள் திணைகள அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தராத நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் அனைவரும் மக்களுடைய கருத்துக்களை ஏற்று அளவீட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த இடத்திலிருந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement