• May 21 2024

கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்மையால் கால்நடைகள் பாதிப்பு- பண்ணையாளர்கள் கவலை! samugammedia

Tamil nila / Nov 20th 2023, 4:12 pm
image

Advertisement

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றார்கள்.

இன்றைய தினம் (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 45க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்கள் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி  பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். 

கோடைகால சிறுபோக செய்கையின்போது நெற்செய்கை மேற்கொள்ளப்படாத தம்பலகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றபோதும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காலப்பகுதிகளில் தங்கள் கால்நடைகளை வைத்து பராமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் இதனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பினை கைவிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் தைப்பொங்கல் வரையான 75 நாட்களுக்கு தம்பலகாமத்தில் இருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொரவெவ குளத்தை அண்மித்துள்ள பகுதியில் சிலர் தமது கால்நடைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இவர்களில் தம்பலகாமத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் பண்ணையாளர்கள் 20 பேரும், மொரவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையளவில் மொரவெவ பகுதியைச் சேர்ந்த சிலரால் தம்பலகாமத்தைச் சேர்ந்த சில பண்ணையாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டு அவர்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களினுள் மண்ணென்னை ஊற்றப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அத்துடன் கால்நடைகள் சுடப்பட்டும் இறைச்சிக்காக கடத்தப்பட்டும் வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே கால்நடைகளுக்கான நிரந்தரமான மேய்ச்சல் தரையை வழங்குமாறும் இல்லாவிடில் பெரும்போக செய்கையின்போது கால்நடைகளின் மேய்ச்சலுக்காக தற்காலிக இடங்களையாவது வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் கால்நடைகளின் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கூறிவருகின்றபோதும் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரைகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னர் வனஜீவி மற்றும் வனவளத்துறை திணைக்களினால் பெரும்பாலான மேய்ச்சல்தரைகள் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் அது விடுவிக்கப்படாமையினால் பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை விற்று வருகின்றார்கள். 

1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடவான பகுதியில் கால்நடை வளர்ப்புக்காக 1500 ஏக்கர் மேய்ச்சல் தரை நிலம் வழங்கப்பட்டிருந்ததுடன் அப்பகுதியில் 60 பேருக்கான உறுதிக்காணி 120 ஏக்கரும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவையும் தற்போது வனஜீவி மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான நிலை தொடருமானால் தாமும் கால்நடை வளர்ப்பை கைவிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.


கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்மையால் கால்நடைகள் பாதிப்பு- பண்ணையாளர்கள் கவலை samugammedia கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றார்கள்.இன்றைய தினம் (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 45க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்கள் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி  பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். கோடைகால சிறுபோக செய்கையின்போது நெற்செய்கை மேற்கொள்ளப்படாத தம்பலகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றபோதும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காலப்பகுதிகளில் தங்கள் கால்நடைகளை வைத்து பராமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் இதனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பினை கைவிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் தைப்பொங்கல் வரையான 75 நாட்களுக்கு தம்பலகாமத்தில் இருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொரவெவ குளத்தை அண்மித்துள்ள பகுதியில் சிலர் தமது கால்நடைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இவர்களில் தம்பலகாமத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் பண்ணையாளர்கள் 20 பேரும், மொரவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையளவில் மொரவெவ பகுதியைச் சேர்ந்த சிலரால் தம்பலகாமத்தைச் சேர்ந்த சில பண்ணையாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டு அவர்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களினுள் மண்ணென்னை ஊற்றப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் கால்நடைகள் சுடப்பட்டும் இறைச்சிக்காக கடத்தப்பட்டும் வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே கால்நடைகளுக்கான நிரந்தரமான மேய்ச்சல் தரையை வழங்குமாறும் இல்லாவிடில் பெரும்போக செய்கையின்போது கால்நடைகளின் மேய்ச்சலுக்காக தற்காலிக இடங்களையாவது வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.நாட்டின் ஜனாதிபதி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் கால்நடைகளின் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கூறிவருகின்றபோதும் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரைகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னர் வனஜீவி மற்றும் வனவளத்துறை திணைக்களினால் பெரும்பாலான மேய்ச்சல்தரைகள் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் அது விடுவிக்கப்படாமையினால் பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை விற்று வருகின்றார்கள். 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடவான பகுதியில் கால்நடை வளர்ப்புக்காக 1500 ஏக்கர் மேய்ச்சல் தரை நிலம் வழங்கப்பட்டிருந்ததுடன் அப்பகுதியில் 60 பேருக்கான உறுதிக்காணி 120 ஏக்கரும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவையும் தற்போது வனஜீவி மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான நிலை தொடருமானால் தாமும் கால்நடை வளர்ப்பை கைவிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement