• May 19 2024

யாழில் 5வது நாளாக தொடரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை..! மக்கள் கடும் எதிர்ப்பு..!samugammedia

Sharmi / Jul 28th 2023, 12:46 pm
image

Advertisement

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் இன்றைய தினம் காணி அளவீட்டு முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்காக அபகரிக்கும் நோக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை அளவீட்டு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து காணி அளவீட்டு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த நான்கு நாட்களாக வடமராட்சி கிழக்குபிரதேசத்தில் இவ்வாறு கடற்படையினருக்கு காணியை அபகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.


யாழில் 5வது நாளாக தொடரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை. மக்கள் கடும் எதிர்ப்பு.samugammedia யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் இன்றைய தினம் காணி அளவீட்டு முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்காக அபகரிக்கும் நோக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை அளவீட்டு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதற்கு காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து காணி அளவீட்டு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த நான்கு நாட்களாக வடமராட்சி கிழக்குபிரதேசத்தில் இவ்வாறு கடற்படையினருக்கு காணியை அபகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement