• May 17 2024

காணி அற்ற அரச ஊழியர்களுக்கு காணி...!பிரதமர் செயலகம் நடவடிக்கை...!samugammedia

Sharmi / Apr 27th 2023, 10:30 pm
image

Advertisement

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணி அற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் பிரதேச செயலகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் முறைக்கேடுகள் உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவரினால் பிரதமர் செலயகத்திற்கு முறையிடப்பட்ட நிலையில் அவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு 14 நாட்களுக்குள் தெளிவுபடுத்துவதுடன் பிரதமர் செயலகத்திற்கும் அறிவிக்குமாறும் வவுனியா பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்தில் காணி அற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவதற்கு வவுனியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கான தெரிவு பட்டியலில் ஓய்வுபெற்றவர்கள், வேறு மாவட்டத்தில் வசிப்பவர்கள், ஏற்கனவே காணி பெற்றவர்களின் பிள்ளைகள் என பலருக்கு காணி வழங்கப்படுவதாகவும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்து பிரதேச செயலாளருக்கு சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஆளுனர் செயலகம் உட்பட்ட பல இடங்களுக்கு பிரதிகளும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் செயலகத்தின் மேலதிக செயலாளர் கையொப்பமிட்டு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் இவ் விடயம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு கடிதம் மூலம் 14 நாட்களுக்குள் தெளிவுறுத்துமாறும் அதன் பிரதியொன்றை தமக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி அற்ற அரச ஊழியர்களுக்கு காணி.பிரதமர் செயலகம் நடவடிக்கை.samugammedia வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணி அற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் பிரதேச செயலகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் முறைக்கேடுகள் உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவரினால் பிரதமர் செலயகத்திற்கு முறையிடப்பட்ட நிலையில் அவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு 14 நாட்களுக்குள் தெளிவுபடுத்துவதுடன் பிரதமர் செயலகத்திற்கும் அறிவிக்குமாறும் வவுனியா பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்தில் காணி அற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவதற்கு வவுனியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதற்கான தெரிவு பட்டியலில் ஓய்வுபெற்றவர்கள், வேறு மாவட்டத்தில் வசிப்பவர்கள், ஏற்கனவே காணி பெற்றவர்களின் பிள்ளைகள் என பலருக்கு காணி வழங்கப்படுவதாகவும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்து பிரதேச செயலாளருக்கு சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஆளுனர் செயலகம் உட்பட்ட பல இடங்களுக்கு பிரதிகளும் அனுப்பப்பட்டிருந்தது.இந்நிலையில் பிரதமர் செயலகத்தின் மேலதிக செயலாளர் கையொப்பமிட்டு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் இவ் விடயம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு கடிதம் மூலம் 14 நாட்களுக்குள் தெளிவுறுத்துமாறும் அதன் பிரதியொன்றை தமக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement