• May 04 2024

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்பு பிரச்சினைகள் - பிரித்தானியா வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம் samugammedia

Chithra / Apr 6th 2023, 9:30 am
image

Advertisement

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் எந்த விடயங்களை முன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 51-1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளை பிரித்தானியா வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் இலங்கையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரித்தானியா வழங்கியது எனவும் அந்த நாட்டின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்பு பிரச்சினைகள் - பிரித்தானியா வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம் samugammedia இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் எந்த விடயங்களை முன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 51-1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளை பிரித்தானியா வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது, இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பெப்ரவரியில் இலங்கையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரித்தானியா வழங்கியது எனவும் அந்த நாட்டின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement