• Sep 21 2024

காணி,பொலிஸ் அதிகாரங்கள்- ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்- சந்திரசேகரன் சுட்டிக்காட்டு.!

Sharmi / Aug 16th 2024, 2:21 pm
image

Advertisement

தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள். 

தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. 

இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

ரணில் விக்கிரமசிங்க 41 வருட காலமாக பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

தமிழ் மக்களுக்கு காணி, பொலிஸ்  அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும். ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார்.

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதற்காக முழு பாராளுமன்றமும் செயற்குழுவாக கூடிய நிலையில் 84 தடவைகள் கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்து எந்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பிக்காத ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழ் மக்கள் கடந்த காலங்களாக பச்சை மற்றும் நீல நிறங்களுக்கு தடுமாறியமைக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். 

ஏனெனில் தமது மக்களை சரியான வழியில் வழிநடத்த முடியாதவர்களாக தமிழ் தலைவர்கள் காணப்பட்டதன் காரணமாக மக்களும் பல நிறங்களை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் அப்பா, தாத்தா மற்றும் பாட்டன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறுகளே அதிகமாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார் .

காணி,பொலிஸ் அதிகாரங்கள்- ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்- சந்திரசேகரன் சுட்டிக்காட்டு. தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள். தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க 41 வருட காலமாக பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.தமிழ் மக்களுக்கு காணி, பொலிஸ்  அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும். ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார்.தமிழ் மக்கள் சார்ந்த தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதற்காக முழு பாராளுமன்றமும் செயற்குழுவாக கூடிய நிலையில் 84 தடவைகள் கூட்டம் இடம்பெற்றது.குறித்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்து எந்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பிக்காத ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.தமிழ் மக்கள் கடந்த காலங்களாக பச்சை மற்றும் நீல நிறங்களுக்கு தடுமாறியமைக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தமது மக்களை சரியான வழியில் வழிநடத்த முடியாதவர்களாக தமிழ் தலைவர்கள் காணப்பட்டதன் காரணமாக மக்களும் பல நிறங்களை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் அப்பா, தாத்தா மற்றும் பாட்டன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறுகளே அதிகமாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார் .

Advertisement

Advertisement

Advertisement