• May 04 2024

மலேசியாவில் சரசரவென சரிந்த மண்!!காணாமல்போன 80 பேர்!

crownson / Dec 16th 2022, 1:27 pm
image

Advertisement

மலேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் முகாம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில்  நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவால் சாலையோரம் இருந்த ஒரு பண்ணை வீடு இடிந்து விழுந்தது.

இது குறித்து திணைக்களத்தின் இயக்குனர் நோரஸாம் காமிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலச்சரிவு முகாம் தளத்தில் இருந்து 30 மீட்டர் (100 அடி) உயரத்தில் இருந்து விழுந்து.

சுமார் ஒரு ஏக்கர் (0.4 ஹெக்டேர்) பரப்பளவை மண்ணால் மூடியதாக கூறினார்.

மொத்தம் 79 பேர் நிலச்சரிவில் சிக்கியதாகவும், அதில் இரண்டு பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

3 பேர் காயங்களுடனும் 23 பேர் பாதுகாப்பான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும்  51 பேரை  தேடும் பனி நடைபெற்று வருகிறது.

மீட்புக் குழு அதிகாலையில் இருந்து வேலை செய்கிறது.

காணாமல் போனவர்கள் விரைவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது வெள்ளிக்கிழமை காலை ட்வீட் செய்தார்.

தலைநகரின் வடக்கே உள்ள படாங் காளி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான கெண்டிங் ஹைலேண்ட்ஸுக்கு வெளியே இந்த பேரழிவு ஏற்பட்டது.

இது ரிசார்ட்டுகள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது.

பெரும்பாலும் இந்த பகுதில் உள்ள காடு மற்றும் நிலத்தை அகற்றுவதாள் சிலாங்கூர் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில்  நிலச்சரிவுகளைச் சந்தித்து வருகிறது.

ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பெய்த மழை வெள்ளத்தால் சுமார் 21,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

மலேசியாவில் சரசரவென சரிந்த மண்காணாமல்போன 80 பேர் மலேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் முகாம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில்  நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் சாலையோரம் இருந்த ஒரு பண்ணை வீடு இடிந்து விழுந்தது.இது குறித்து திணைக்களத்தின் இயக்குனர் நோரஸாம் காமிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலச்சரிவு முகாம் தளத்தில் இருந்து 30 மீட்டர் (100 அடி) உயரத்தில் இருந்து விழுந்து.சுமார் ஒரு ஏக்கர் (0.4 ஹெக்டேர்) பரப்பளவை மண்ணால் மூடியதாக கூறினார்.மொத்தம் 79 பேர் நிலச்சரிவில் சிக்கியதாகவும், அதில் இரண்டு பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது. 3 பேர் காயங்களுடனும் 23 பேர் பாதுகாப்பான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும்  51 பேரை  தேடும் பனி நடைபெற்று வருகிறது.மீட்புக் குழு அதிகாலையில் இருந்து வேலை செய்கிறது. காணாமல் போனவர்கள் விரைவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது வெள்ளிக்கிழமை காலை ட்வீட் செய்தார்.தலைநகரின் வடக்கே உள்ள படாங் காளி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான கெண்டிங் ஹைலேண்ட்ஸுக்கு வெளியே இந்த பேரழிவு ஏற்பட்டது.இது ரிசார்ட்டுகள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது.பெரும்பாலும் இந்த பகுதில் உள்ள காடு மற்றும் நிலத்தை அகற்றுவதாள் சிலாங்கூர் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில்  நிலச்சரிவுகளைச் சந்தித்து வருகிறது. ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பெய்த மழை வெள்ளத்தால் சுமார் 21,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement