• Nov 25 2024

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

Sharmi / Aug 19th 2024, 10:28 am
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில்  7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய அறிவிப்பு இன்னும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அஹெலியகொட மற்றும் அலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, களுத்துறை, பரகொட பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்ததுடன், நிவாரண குழுவினர் பரகொட பிரதேசத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில்  7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய அறிவிப்பு இன்னும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அஹெலியகொட மற்றும் அலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.இதேவேளை, களுத்துறை, பரகொட பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்ததுடன், நிவாரண குழுவினர் பரகொட பிரதேசத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement