• May 17 2024

இலங்கையில் மிகப் பெரிய கல்வெட்டு திம்புலாகலில் கண்டுபிடிப்பு...!samugammedia

Sharmi / Nov 9th 2023, 11:33 am
image

Advertisement

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய மற்றும் மிகப் பெரிய கல்வெட்டு பொலன்னறுவையின் வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலக கல்வெட்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வு குழுவினரால் இந்த அரிய ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.எம்.ஜி.ரத்னபால, திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப, திம்புலாகல ராகுலலங்கார அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கல்வெட்டைப் பிரதி எடுக்க ஒரு மாதத்திற்கும் மேலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திம்புலாகலை மலைத்தொடரில் தங்கியிருந்து கடந்த 26ஆம் திகதி முதல் கல்வெட்டைப் பிரதியெடுக்க ஆரம்பித்ததாக திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப திம்புலாகல ராகுலலங்கார அரச அதிபர் தெரிவித்தார்.

சுமார் 45 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட இந்தக் கல்வெட்டு எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று இதுவரை கூற இயலாது என்றும், தொல்லியல் துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றும் ராகுலலங்கார அரச அதிபர் தெரிவித்தார்.

பிரதியெடுப்பு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையின் மிகவும் அரிதான மிகப் பெரிய ஆவணத்தைப் பாதுகாக்கும் வகையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து காட்சிப்படுத்தல் நிகழ்ச்சியொன்று அமுல்படுத்தப்படும் என திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப திம்புலாகல ராகுலலங்கார நா தேரர் மேலும் தெரிவித்தார். 


இலங்கையில் மிகப் பெரிய கல்வெட்டு திம்புலாகலில் கண்டுபிடிப்பு.samugammedia இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய மற்றும் மிகப் பெரிய கல்வெட்டு பொலன்னறுவையின் வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.தொல்பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலக கல்வெட்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வு குழுவினரால் இந்த அரிய ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொலன்னறுவை தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.எம்.ஜி.ரத்னபால, திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப, திம்புலாகல ராகுலலங்கார அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கல்வெட்டைப் பிரதி எடுக்க ஒரு மாதத்திற்கும் மேலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொல்பொருள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திம்புலாகலை மலைத்தொடரில் தங்கியிருந்து கடந்த 26ஆம் திகதி முதல் கல்வெட்டைப் பிரதியெடுக்க ஆரம்பித்ததாக திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப திம்புலாகல ராகுலலங்கார அரச அதிபர் தெரிவித்தார்.சுமார் 45 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட இந்தக் கல்வெட்டு எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று இதுவரை கூற இயலாது என்றும், தொல்லியல் துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றும் ராகுலலங்கார அரச அதிபர் தெரிவித்தார்.பிரதியெடுப்பு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையின் மிகவும் அரிதான மிகப் பெரிய ஆவணத்தைப் பாதுகாக்கும் வகையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து காட்சிப்படுத்தல் நிகழ்ச்சியொன்று அமுல்படுத்தப்படும் என திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப திம்புலாகல ராகுலலங்கார நா தேரர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement