• Sep 21 2024

தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி வினோத மோசடியில் ஈடுபடும் தலைவர்கள்- சஜித் எச்சரிக்கை!

Tamil nila / Jul 29th 2024, 7:46 pm
image

Advertisement

“ தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் அண்மையில் ஒரு வினோத மோசடியை நடாத்தி, போலி வர்த்தமானி மூலம் 1700 சம்பளம் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். இது ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவோம் என கூறிக் கொண்டு, தோட்ட உரிமையாளர்களுடன் டீல் போட்டுள்ளனர்.

இரு தரப்பையும் சமநிலைப்படுத்தி மக்களை ஏமாற்றும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களை விடுத்து, தோட்டத் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவோம்.

தோட்ட மக்களை கூலித் தொழிலாளிகள் என்ற நிலையில் வைத்திருப்பதற்கும், தோட்ட மக்களை லயன் அறைகளுக்குள் வைத்திருக்கவுமே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். தோட்ட மக்களுக்கென தனி கிராமங்களை உருவாக்காமல் லயன் அறையிலான கிராமங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நாட்டின் அரச தோட்டத் துறையில், தனியார் தோட்டத் துறையில் இலட்சக்கணக்கான ஏக்கர் காணி விவசாயம் செய்யப்படாத பாழ் நிலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலை இருந்தும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதாக ஏமாற்றி வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றாமல், தோட்ட மக்களை நிரந்தர தொழிலாளியாக்காமல், காணியில் வீட்டு உரிமையை வழங்கி சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். தோட்ட மக்களை பலப்படுத்துவேன்.

தோட்டத் தொழிலாளர்களும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக தேயிலை உற்பத்திக்கு பங்களிக்க முடியும். சாதி, மதம், வர்க்கம், கட்சி என வேறுபாடின்றி இத்துறையில் ஆர்வமுள்ள ஏனைய இளைஞர்களும் தோட்டத் தொழில் முனைவோர் ஆக்கப்படுவர். தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பெருந்தோட்ட தொழில்முனைவோராக மாற்றுவேன்.” – என்றார்.

தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி வினோத மோசடியில் ஈடுபடும் தலைவர்கள்- சஜித் எச்சரிக்கை “ தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் அண்மையில் ஒரு வினோத மோசடியை நடாத்தி, போலி வர்த்தமானி மூலம் 1700 சம்பளம் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். இது ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவோம் என கூறிக் கொண்டு, தோட்ட உரிமையாளர்களுடன் டீல் போட்டுள்ளனர்.இரு தரப்பையும் சமநிலைப்படுத்தி மக்களை ஏமாற்றும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றனர்.தோட்டத் தொழிலாளர்களை விடுத்து, தோட்டத் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவோம்.தோட்ட மக்களை கூலித் தொழிலாளிகள் என்ற நிலையில் வைத்திருப்பதற்கும், தோட்ட மக்களை லயன் அறைகளுக்குள் வைத்திருக்கவுமே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். தோட்ட மக்களுக்கென தனி கிராமங்களை உருவாக்காமல் லயன் அறையிலான கிராமங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்நாட்டின் அரச தோட்டத் துறையில், தனியார் தோட்டத் துறையில் இலட்சக்கணக்கான ஏக்கர் காணி விவசாயம் செய்யப்படாத பாழ் நிலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலை இருந்தும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதாக ஏமாற்றி வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றாமல், தோட்ட மக்களை நிரந்தர தொழிலாளியாக்காமல், காணியில் வீட்டு உரிமையை வழங்கி சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். தோட்ட மக்களை பலப்படுத்துவேன்.தோட்டத் தொழிலாளர்களும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக தேயிலை உற்பத்திக்கு பங்களிக்க முடியும். சாதி, மதம், வர்க்கம், கட்சி என வேறுபாடின்றி இத்துறையில் ஆர்வமுள்ள ஏனைய இளைஞர்களும் தோட்டத் தொழில் முனைவோர் ஆக்கப்படுவர். தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பெருந்தோட்ட தொழில்முனைவோராக மாற்றுவேன்.” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement