• Nov 19 2024

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கிய மொட்டுக் கட்சியின் தலைவர்கள்..!

Sharmi / Jul 23rd 2024, 9:54 pm
image

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்த ஆதாரங்களின் படி,

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அங்கு அவர்கள் முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75  மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கிய மொட்டுக் கட்சியின் தலைவர்கள். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஆதாரங்களின் படி,இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அங்கு அவர்கள் முடிவு செய்தனர்.அதற்காக அவர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75  மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement