சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவானசிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றியமை தொடர்பில், இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்க, கொழும்பு கணிணி குற்றத் தடுப்பு பிரிவில் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்தே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல கோடி ரூபா செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இலங்கையில் தற்போது வெற்றி திரைப்படமாக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் லீக்கான புதிய திரைப்படம். சந்தேகநபர் ஒருவர் கைது. சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவான சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றியமை தொடர்பில், இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்க, கொழும்பு கணிணி குற்றத் தடுப்பு பிரிவில் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார்.இதையடுத்தே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பல கோடி ரூபா செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இலங்கையில் தற்போது வெற்றி திரைப்படமாக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.