கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்துக்குள் அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயற்படும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர்.
எனினும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றைய தினம் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்துக்குள் அகற்ற தவறினால் சட்ட நடவடிக்கை - சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்துக்குள் அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயற்படும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர். எனினும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றைய தினம் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.