• Nov 28 2024

யாழ் பல்கலையில் இடம்பெறவுள்ள சட்ட மாநாடு...! முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்பு...!samugammedia

Sharmi / Jan 25th 2024, 7:40 am
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் ஏற்பாட்டில்  எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சட்ட மாநாடு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் இம் மாநாடானது இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.

'நெருக்கடிகளுக் கூடான வழிகள்' என்னும் தொனிப் பொருளில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணமும்  கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவி செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதிராதிகா குமாரசுவாமி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில், சிறப்பு நிகழ்வாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரன்,சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோரின் திறப்புரைகள் இடம்பெறவுள்ளன.

'இலங்கையில் பகிரங்க சடடத்தின் எதிர்காலம்: நெருக்கடிகளும் சவால்களும்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட பிரதம விருந்தினராகவும் அரசமைப்பு சட்ட நிபுணர் ஜனாதிபதி சட்டத் தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண கௌரவ விருந்தினராகவும் பங்கேற்பர்.

இதில், சிறப்பம்சமாக அமெரிக்காவின் யாலே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் துணைப் பேராசிரியர் ரோஹித் டே, சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி வினோத் சுரனா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.

அத்துடன் 'இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மேலெழுவதற்கான சட்டத்தின் வகிபாகம்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் நடைபெறும்.

மாநாட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளின் சுருக்கம் இரண்டாம் நாள் நிகழ்வில் ஆய்வாளர்களால் வாசிக்கப்படவுள்ளது.

சமகாலப் பிரச்னைகளை முன்னிறுத்தியதாக பல்வேறு சட்ட விடயங்களை ஆராய்ந்து அதனூடாக இலங்கையின் வட பிராந்தியத்தின் பொருளாதார,சமூக விடயங்களை வினைத்திறனாக அணுகும் தன்மையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க முடியும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.





யாழ் பல்கலையில் இடம்பெறவுள்ள சட்ட மாநாடு. முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்பு.samugammedia யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் ஏற்பாட்டில்  எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சட்ட மாநாடு இடம்பெறவுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் இம் மாநாடானது இடம்பெறவுள்ளது.இந்தியாவின் புகழ்பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.'நெருக்கடிகளுக் கூடான வழிகள்' என்னும் தொனிப் பொருளில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணமும்  கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவி செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதிராதிகா குமாரசுவாமி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.இதில், சிறப்பு நிகழ்வாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரன்,சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோரின் திறப்புரைகள் இடம்பெறவுள்ளன.'இலங்கையில் பகிரங்க சடடத்தின் எதிர்காலம்: நெருக்கடிகளும் சவால்களும்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட பிரதம விருந்தினராகவும் அரசமைப்பு சட்ட நிபுணர் ஜனாதிபதி சட்டத் தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண கௌரவ விருந்தினராகவும் பங்கேற்பர்.இதில், சிறப்பம்சமாக அமெரிக்காவின் யாலே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் துணைப் பேராசிரியர் ரோஹித் டே, சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி வினோத் சுரனா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.அத்துடன் 'இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மேலெழுவதற்கான சட்டத்தின் வகிபாகம்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடலும் நடைபெறும்.மாநாட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளின் சுருக்கம் இரண்டாம் நாள் நிகழ்வில் ஆய்வாளர்களால் வாசிக்கப்படவுள்ளது.சமகாலப் பிரச்னைகளை முன்னிறுத்தியதாக பல்வேறு சட்ட விடயங்களை ஆராய்ந்து அதனூடாக இலங்கையின் வட பிராந்தியத்தின் பொருளாதார,சமூக விடயங்களை வினைத்திறனாக அணுகும் தன்மையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க முடியும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement