• Nov 26 2024

கம்பியில் சிக்கி தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்த சிறுத்தை உயிரிழப்பு

Chithra / Sep 1st 2024, 1:08 pm
image

 

மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில், கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரக்கறி தோட்டத்திலிருந்து, மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது.

மேற்படி சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் அது தொடர்பில் இன்று காலை  தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

உயிரிழந்த சிறுத்தையை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், கம்பி வலையை போட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


கம்பியில் சிக்கி தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்த சிறுத்தை உயிரிழப்பு  மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில், கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.மரக்கறி தோட்டத்திலிருந்து, மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது.மேற்படி சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் அது தொடர்பில் இன்று காலை  தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிரிழந்த சிறுத்தையை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும், கம்பி வலையை போட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement