• Nov 22 2024

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தொழுநோய்..! பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jan 18th 2024, 1:00 pm
image

 

குழந்தைகளிடையே பரவும் தொழுநோயை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால் தொழுநோய் தொற்றாது எனவும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயில் 90% பெரியவர்களால் தொற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 315 ஆகும். 

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழுநோயாளிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 151 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 116 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தொழுநோய். பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  குழந்தைகளிடையே பரவும் தொழுநோயை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால் தொழுநோய் தொற்றாது எனவும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயில் 90% பெரியவர்களால் தொற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடந்த வருடம் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 315 ஆகும். மேலும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழுநோயாளிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 151 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 116 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement