• May 07 2024

ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்ப்போம்...!பேஸ்புக் தலைமை நிர்வாகிக்கு அழைப்பு விடுத்த எலான் மஸ்க்...!samugammedia

Sharmi / Jun 23rd 2023, 11:10 am
image

Advertisement

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுடன் நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாக உலகின் முதலாவது பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளமை இணையவாசிகள் மத்தியில் பல வேடிக்கையான கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில்  பேஸ்புக் நிறுவனமும்  மற்றும் எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் நிறுவனமும் அமெரிக்காவில் இயங்கி வருகின்றன.

இவ்வாறான சூழலில் இரண்டு நிறுவனர்களுக்கும் இடையே  சமூக வலைதளங்களில் அவ்வப்பொழுது வாக்குவாதங்கள் நடை பெற்றும் வருகின்றது.

அண்மையில் டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒன்றை தொடங்க இருப்பதாகவும், வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சிக்கு  P92 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

மஸ்க்,  இந்த முயற்சி தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து முகநூல் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.

அதனை கவனித்த டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ''ஜூக்கர்பெர்க் அவர்கள்  ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர்.சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்  எனவே அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை பதிவிட்டுள்ளார்.

அதனை  வேடிக்கையாக எடுத்த எலான் மஸ்க், நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா? என்றும் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், இடத்தை தெரிவிக்குமாறு எதிர்த்து கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான  இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகள் மத்தியில் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு பதிவிட வழி சமைத்துள்ளது.

ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்ப்போம்.பேஸ்புக் தலைமை நிர்வாகிக்கு அழைப்பு விடுத்த எலான் மஸ்க்.samugammedia பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுடன் நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாக உலகின் முதலாவது பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளமை இணையவாசிகள் மத்தியில் பல வேடிக்கையான கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில்  பேஸ்புக் நிறுவனமும்  மற்றும் எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் நிறுவனமும் அமெரிக்காவில் இயங்கி வருகின்றன. இவ்வாறான சூழலில் இரண்டு நிறுவனர்களுக்கும் இடையே  சமூக வலைதளங்களில் அவ்வப்பொழுது வாக்குவாதங்கள் நடை பெற்றும் வருகின்றது. அண்மையில் டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒன்றை தொடங்க இருப்பதாகவும், வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சிக்கு  P92 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மஸ்க்,  இந்த முயற்சி தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து முகநூல் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அதனை கவனித்த டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ''ஜூக்கர்பெர்க் அவர்கள்  ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர்.சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்  எனவே அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை பதிவிட்டுள்ளார். அதனை  வேடிக்கையாக எடுத்த எலான் மஸ்க், நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா என்றும் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், இடத்தை தெரிவிக்குமாறு எதிர்த்து கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான  இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகள் மத்தியில் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு பதிவிட வழி சமைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement