• Mar 10 2025

பாராளுமன்றத்தில் நட்புறவை வளர்ப்போம்; ரோஹித அபேகுணவர்தன அழைப்பு!

Chithra / Mar 10th 2025, 1:14 pm
image


பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் நட்புறவை வளர்ப்பதன் மூலம் கல்விக்கான ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். 

கல்வியமைச்சு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கல்வி அமைச்சராகவும் மூன்றாவது பெண் பிரதமராகவும் ஹரிணி அமரசூரிய  இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சி.

20 பேர் அந்த பக்கம் பெண்ணுறுப்பினர்கள் இருக்கிறார்கள். எங்கள் பக்கம் இரண்டு பெண்ணுறுப்பினர்கள் இருக்கிறார்கள். 

பாராளுமன்றத்தில் கல்விக்காக ஒரு நல்ல முன்மாதிரியை நாங்கள் வழங்குவோம். பாராளுமன்றத்தில் 224 பேர் இருக்கிறோம்.  நாங்கள் ஐந்து வருடங்கள் இங்கே இருக்கப் போகிறோம். நாங்கள் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வழங்க வேண்டும். முன்மாதிரியை வழங்கிய ஒரு அரசாங்கமாக உங்களுடைய அரசாங்கம் இருக்கிறது. 

எங்கள் மத்தியில் முதலில் புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வோம். இங்கு இருக்கின்ற பெண் உறுப்பினர்களோடு பேசுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறேன் எனத்தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நட்புறவை வளர்ப்போம்; ரோஹித அபேகுணவர்தன அழைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் நட்புறவை வளர்ப்பதன் மூலம் கல்விக்கான ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கல்வியமைச்சு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்வி அமைச்சராகவும் மூன்றாவது பெண் பிரதமராகவும் ஹரிணி அமரசூரிய  இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சி.20 பேர் அந்த பக்கம் பெண்ணுறுப்பினர்கள் இருக்கிறார்கள். எங்கள் பக்கம் இரண்டு பெண்ணுறுப்பினர்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கல்விக்காக ஒரு நல்ல முன்மாதிரியை நாங்கள் வழங்குவோம். பாராளுமன்றத்தில் 224 பேர் இருக்கிறோம்.  நாங்கள் ஐந்து வருடங்கள் இங்கே இருக்கப் போகிறோம். நாங்கள் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வழங்க வேண்டும். முன்மாதிரியை வழங்கிய ஒரு அரசாங்கமாக உங்களுடைய அரசாங்கம் இருக்கிறது. எங்கள் மத்தியில் முதலில் புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வோம். இங்கு இருக்கின்ற பெண் உறுப்பினர்களோடு பேசுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறேன் எனத்தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement