யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின்(JSAC) ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளினை தடுப்போம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு யாழில் இன்று(05) இடம்பெற்றது.
யாழ் இராமநாதன் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலைய பணிப்பாளர் பேராசிரியர் சிவானி சண்முகதாஸ் மற்றும் சிறப்பு பேச்சாளராக பெண் உரிமை செயற்பாட்டாளர் திருமதி. நளினி ரட்ணராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்துரைகளும் இடம்பெற்றது.
அதேவேளை, இந்நிகழ்வில் பெண்கள் அமைப்புக்கள் , பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளினை தடுப்போம்'. யாழில் இடம்பெற்ற நிகழ்வு.samugammedia யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின்(JSAC) ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளினை தடுப்போம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு யாழில் இன்று(05) இடம்பெற்றது.யாழ் இராமநாதன் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலைய பணிப்பாளர் பேராசிரியர் சிவானி சண்முகதாஸ் மற்றும் சிறப்பு பேச்சாளராக பெண் உரிமை செயற்பாட்டாளர் திருமதி. நளினி ரட்ணராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்துரைகளும் இடம்பெற்றது.அதேவேளை, இந்நிகழ்வில் பெண்கள் அமைப்புக்கள் , பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.