ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,
பிரிக்ஸ் குடும்பத்துடன் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம்.
மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான RIA நோவோஸ்டியிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே மாதத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நாட்டின் விண்ணப்பத்திற்கு ஆதரவைக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர புட்டினுக்கு கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,பிரிக்ஸ் குடும்பத்துடன் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம்.மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான RIA நோவோஸ்டியிடம் கூறியுள்ளார்.இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதே மாதத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நாட்டின் விண்ணப்பத்திற்கு ஆதரவைக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.