உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை 03 நாட்கள் மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக அமையும்.
இதற்காக, 1913, 0112-877688 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும், oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள கலால் அலுவலகங்கள் மற்றும் விசேட கண்காணிப்புப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகளை வழங்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள் உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை 03 நாட்கள் மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக அமையும்.இதற்காக, 1913, 0112-877688 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும், oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள கலால் அலுவலகங்கள் மற்றும் விசேட கண்காணிப்புப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகளை வழங்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.