• Nov 22 2024

நிலவும் சீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் உயிரிழந்த கால்நடைகள்...!samugammedia

Sharmi / Dec 25th 2023, 3:15 pm
image

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தில் கிளிநொச்சி வவுனியா உள்ளிட்ட இடங்களில் காணப்படும் நீர்நிலைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து ஓட முடியாத நிலையில்  வாழ்விடங்களில் தேங்கி நிற்பதுடன் இதனால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் பகுதியில்  கால்நடை பண்ணையொன்றில் வெள்ளத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட கோழிகளும் ஐந்து ஆடுகளும்  உயிரிழந்துள்ளது.

அதேவேளை வெள்ளநீர் வடிந்த பின் தொற்றுநோய் காரணமாக நான்கு ஆடுகள் இறந்துள்ளதாகவும் அதில் இரண்டு ஆடுகள் தற்பொழுது கடும் நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக கால்நடை வைத்தியர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



நிலவும் சீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் உயிரிழந்த கால்நடைகள்.samugammedia தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.குறிப்பாக வடமாகாணத்தில் கிளிநொச்சி வவுனியா உள்ளிட்ட இடங்களில் காணப்படும் நீர்நிலைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து ஓட முடியாத நிலையில்  வாழ்விடங்களில் தேங்கி நிற்பதுடன் இதனால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.தருமபுரம் பகுதியில்  கால்நடை பண்ணையொன்றில் வெள்ளத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட கோழிகளும் ஐந்து ஆடுகளும்  உயிரிழந்துள்ளது.அதேவேளை வெள்ளநீர் வடிந்த பின் தொற்றுநோய் காரணமாக நான்கு ஆடுகள் இறந்துள்ளதாகவும் அதில் இரண்டு ஆடுகள் தற்பொழுது கடும் நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக கால்நடை வைத்தியர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement