• May 17 2024

5வது நாளாக தொடரும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்...!எட்டிப் பார்க்காத அரச அதிகாரிகள்...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 4:30 pm
image

Advertisement

கடந்த ஐந்து தினங்களாக வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தாங்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பிலும் தமது பிரச்சினைகள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளர்களும் அக்கரையற்ற நிலையிலேயே உள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் இன்று கால்நடை பண்ணையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் சூழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சமாசம், மண்முனை தென் மேற்கு கால்நடை கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தலைமையிலான மட்டக்களப்பு மண்முனை வடக்கு தமிழரசுக்கட்சி கிளையும் இன்றைய ஐந்தாம் நாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கால்நடைபண்ணையாளர்கள முன்னெடுத்துவரும்; இந்த போராட்டம் வலுவடைந்துவரும் நிலையில் இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு துணியை அணிந்துகொண்டு கைகளைக்கோருத்த நிலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கு, காணிக்கொள்ளையர்களே மேய்ச்சல்தரையினை விற்றுவிட்டீர்களா?,அரசே மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

அரசாங்கத்தில்; அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்படுவதாகவும் இங்கு பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்கள் மீது பல்வேறு வழியில் முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் என்பது இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே பொருளாதார ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் எனவும் இதன்பேது தெரிவிக்கப்பட்டது.

ஐந்தாவது நாளை போராட்டம் அடைந்துள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எங்களை சந்தித்து எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும் எமக்கான தீர்வினை வழங்காவிட்டால் இனிவரும் காலங்களில் பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று மட்டக்களப்பு மக்களிடம் வாக்குகளைப்பெற்றவர்கள் இன்று ஒரு மேய்ச்சல் தரையினைக்கூட மீட்கமுடியாத நிலையில் உள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இந்தபோராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.


5வது நாளாக தொடரும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்.எட்டிப் பார்க்காத அரச அதிகாரிகள்.samugammedia கடந்த ஐந்து தினங்களாக வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தாங்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பிலும் தமது பிரச்சினைகள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளர்களும் அக்கரையற்ற நிலையிலேயே உள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.மட்டக்களப்பு சித்தாண்டியில் இன்று கால்நடை பண்ணையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் சூழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்தனர்.இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சமாசம், மண்முனை தென் மேற்கு கால்நடை கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தலைமையிலான மட்டக்களப்பு மண்முனை வடக்கு தமிழரசுக்கட்சி கிளையும் இன்றைய ஐந்தாம் நாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.கால்நடைபண்ணையாளர்கள முன்னெடுத்துவரும்; இந்த போராட்டம் வலுவடைந்துவரும் நிலையில் இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு துணியை அணிந்துகொண்டு கைகளைக்கோருத்த நிலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கு, காணிக்கொள்ளையர்களே மேய்ச்சல்தரையினை விற்றுவிட்டீர்களா,அரசே மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.அரசாங்கத்தில்; அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்படுவதாகவும் இங்கு பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.கால்நடை பண்ணையாளர்கள் மீது பல்வேறு வழியில் முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் என்பது இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே பொருளாதார ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் எனவும் இதன்பேது தெரிவிக்கப்பட்டது.ஐந்தாவது நாளை போராட்டம் அடைந்துள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எங்களை சந்தித்து எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும் எமக்கான தீர்வினை வழங்காவிட்டால் இனிவரும் காலங்களில் பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று மட்டக்களப்பு மக்களிடம் வாக்குகளைப்பெற்றவர்கள் இன்று ஒரு மேய்ச்சல் தரையினைக்கூட மீட்கமுடியாத நிலையில் உள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.இந்தபோராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement