• May 02 2024

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல் சம்பவம்...! இலங்கையில் ஜனநாயகத்தின் நிலையை வெளிநாட்டவர் உணர சந்தர்ப்பம்...!இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 4:21 pm
image

Advertisement

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாதாரணமாக அடையாள அட்டை என்பது இந்த நாட்டினுடைய மக்கள் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. அந்த சட்டங்களிலே சில மாற்றங்களை கொண்டு வருவதற்காகவும் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையிலே மக்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலே வசதிகள் கூடிய நடவடிக்கை எடுக்கப்படுமேயானால் நாங்கள் அதனை வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெருந்தோட்ட பகுதியிலே அடையாள அட்டையின்றி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.  எனவே அந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு நடமாடும் சேவைகளை செய்து அவர்களுக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும், பல நாளிதழ்களில் வந்துள்ளது இலங்கை நாட்டிலே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த வகையில் திருகோணமலையில் வைத்து கஜேந்திரன் தாக்கப்பட்டுள்ளார் அதனை நாங்கள் கண்டிக்கின்றோம் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதனைப்போல அனுராதபுரத்திலே புத்திக்க பிரேமரத்ன துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இருக்கின்றார் அதனை நாங்கள் கண்டிக்கின்றோம் வெளிநாடுகளிலே எமது நாட்டில் ஜனநாயகம் அமைதி சமாதானம் இருக்கின்றது என நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். எங்களுடைய ஜனநாயகம் எப்படி இருக்கும் என்று வெளிநாட்டவர் உணரக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்

மேலும், 225 பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த ஒரு வருடத்தில் பல்வேறு திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் எவற்றிலும் அபிவிருத்தி பற்றி கூறவில்லை சட்டங்கள் இயற்றுவதன் மூலமாக மக்களை திருப்திப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்

மேலும், மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு சட்டங்களை கொண்டு வருவதால் நாட்டின் அபிவிருத்திகளை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இருந்து  எமது நாட்டில் இருக்கின்றது அந்த சட்டத்தை மாற்றியமைக்க முன்மொழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது அதனால்  மக்கள் எதிர்பார்க்கின்ற நன்மை கிடைக்கவில்லை

கடந்த காலங்களை விட மிக மோசமான சட்டங்களை கொண்டுவந்து மக்களை நசுக்கவும் ஊடகங்களை நசுக்கவும் மக்களினுடைய சுதந்திரத்தை பறிப்பதற்குமே இந்த சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது யூட்டியுப் பேஸ்புக் பாவிக்கின்ற மக்களுக்கு, உண்மையை சொல்லுகின்ற மக்களுக்கு இவை அச்சுறுத்தலாக அமைகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தற்போது எமது நாட்டில் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் கொண்டு வரும் பொழுது அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை சமர்ப்பித்த போது  எதிர்க்கட்சி தரப்பிலே மாற்று கருத்துக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது அதனை ஏற்றுக்கொள்வதாக எந்த வித கருத்துக்களும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல் சம்பவம். இலங்கையில் ஜனநாயகத்தின் நிலையை வெளிநாட்டவர் உணர சந்தர்ப்பம்.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு.samugammedia நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சாதாரணமாக அடையாள அட்டை என்பது இந்த நாட்டினுடைய மக்கள் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. அந்த சட்டங்களிலே சில மாற்றங்களை கொண்டு வருவதற்காகவும் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையிலே மக்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலே வசதிகள் கூடிய நடவடிக்கை எடுக்கப்படுமேயானால் நாங்கள் அதனை வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் பெருந்தோட்ட பகுதியிலே அடையாள அட்டையின்றி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.  எனவே அந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு நடமாடும் சேவைகளை செய்து அவர்களுக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.மேலும், பல நாளிதழ்களில் வந்துள்ளது இலங்கை நாட்டிலே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த வகையில் திருகோணமலையில் வைத்து கஜேந்திரன் தாக்கப்பட்டுள்ளார் அதனை நாங்கள் கண்டிக்கின்றோம் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.அதனைப்போல அனுராதபுரத்திலே புத்திக்க பிரேமரத்ன துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இருக்கின்றார் அதனை நாங்கள் கண்டிக்கின்றோம் வெளிநாடுகளிலே எமது நாட்டில் ஜனநாயகம் அமைதி சமாதானம் இருக்கின்றது என நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். எங்களுடைய ஜனநாயகம் எப்படி இருக்கும் என்று வெளிநாட்டவர் உணரக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்மேலும், 225 பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த ஒரு வருடத்தில் பல்வேறு திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் எவற்றிலும் அபிவிருத்தி பற்றி கூறவில்லை சட்டங்கள் இயற்றுவதன் மூலமாக மக்களை திருப்திப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார் மேலும், மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு சட்டங்களை கொண்டு வருவதால் நாட்டின் அபிவிருத்திகளை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இருந்து  எமது நாட்டில் இருக்கின்றது அந்த சட்டத்தை மாற்றியமைக்க முன்மொழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது அதனால்  மக்கள் எதிர்பார்க்கின்ற நன்மை கிடைக்கவில்லை கடந்த காலங்களை விட மிக மோசமான சட்டங்களை கொண்டுவந்து மக்களை நசுக்கவும் ஊடகங்களை நசுக்கவும் மக்களினுடைய சுதந்திரத்தை பறிப்பதற்குமே இந்த சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது யூட்டியுப் பேஸ்புக் பாவிக்கின்ற மக்களுக்கு, உண்மையை சொல்லுகின்ற மக்களுக்கு இவை அச்சுறுத்தலாக அமைகின்றது என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தற்போது எமது நாட்டில் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சட்டம் கொண்டு வரும் பொழுது அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை சமர்ப்பித்த போது  எதிர்க்கட்சி தரப்பிலே மாற்று கருத்துக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது அதனை ஏற்றுக்கொள்வதாக எந்த வித கருத்துக்களும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement