உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக நாளையதினம் விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி தீர்மானங்களை நாளையதினம் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் கீழ் , பிரதமர், சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், நாளையதினம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தை ஆராய்வதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சின் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை எதிர்வரும் 17ஆம் திகதி பி.ப 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சர்ப்பிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம்: நாளை நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக நாளையதினம் விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி தீர்மானங்களை நாளையதினம் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.நாளை காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.அதன்படி, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் கீழ் , பிரதமர், சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், நாளையதினம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தை ஆராய்வதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சின் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை எதிர்வரும் 17ஆம் திகதி பி.ப 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சர்ப்பிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.