• Apr 27 2024

உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Jan 29th 2023, 10:47 am
image

Advertisement

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

இதேவேளை நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்று முன்தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதகவும் கூறினார்.

இதற்கு முன்னதாக இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.இதேவேளை நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்று முன்தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதகவும் கூறினார்.இதற்கு முன்னதாக இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement