• May 17 2024

இலங்கையில் 'குடி' மக்கள் குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம்

Chithra / Jan 7th 2023, 3:14 pm
image

Advertisement

வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை கலால் திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான கலால் வருமானம் 140 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வருடம் கலால் வருமானம் 170 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.


கலால் திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதானி சமன் ஜயசிங்க, திணைக்கள வரலாற்றின் அதிகூடிய வரி வருமான இலக்காக 2023 ஆம் ஆண்டில் 217 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள திணைக்களத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மூன்று பிரதான வருவாய் சேகரிப்பு ஆயுதங்களில் ஒன்றின் தலைவராக இந்த வருடத்திற்கான வருமான இலக்கை அடைவதற்கான புதிய உத்திகளை நடைமுறைப்படுத்துவார் என கலால் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 'குடி' மக்கள் குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனை கலால் திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.2021 ஆம் ஆண்டுக்கான கலால் வருமானம் 140 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வருடம் கலால் வருமானம் 170 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.கலால் திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதானி சமன் ஜயசிங்க, திணைக்கள வரலாற்றின் அதிகூடிய வரி வருமான இலக்காக 2023 ஆம் ஆண்டில் 217 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.ராஜகிரியவில் உள்ள திணைக்களத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் மூன்று பிரதான வருவாய் சேகரிப்பு ஆயுதங்களில் ஒன்றின் தலைவராக இந்த வருடத்திற்கான வருமான இலக்கை அடைவதற்கான புதிய உத்திகளை நடைமுறைப்படுத்துவார் என கலால் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement