• Jun 17 2024

வாள்வெட்டில் முடிந்த காதல் பிரச்சினை - மன்னாரில் பரபரப்புச் சம்பவம்

Chithra / May 26th 2024, 12:50 pm
image

Advertisement

மன்னார் - பேசாலை முருகன் கோவில் பகுதியில் காதல் பிரச்சினையால் பல நாட்களாக இடம்பெற்ற  பிரச்சினை வாள்வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது.

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி  காயமடைந்த நபர் நேற்றைய தினம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வன்முறை சம்பவம் காதல் சார்ந்த பிரச்சினை ஒன்றினால் பல நாட்களாக இடம்பெற்று வந்ததாக தெரிய வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதியின் சகோதரர்களுக்கும் இளைஞனுக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து  அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள யுவதியின் குடும்பத்திற்கு சொந்தமான கடைக்கு மர்ம நபர்கள் சிலர் பெற்றோல் குண்டு ஒன்றை வீசியுள்ளனர்

நேற்றுமுன்தினம் சில இளைஞர்கள் குடி போதையில் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பரஸ்பரம் தாக்குதலுக்கு உள்ளாகி இரு பகுதியினரும் காயமடைந்துள்ளனர்

இந் நிலையில் குறித்த பகுதியில் தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பல சிசிரிவி  காணொளிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்ட போதிலும்,

இதுவரை எவரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

வாள்வெட்டில் முடிந்த காதல் பிரச்சினை - மன்னாரில் பரபரப்புச் சம்பவம் மன்னார் - பேசாலை முருகன் கோவில் பகுதியில் காதல் பிரச்சினையால் பல நாட்களாக இடம்பெற்ற  பிரச்சினை வாள்வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது.வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி  காயமடைந்த நபர் நேற்றைய தினம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த வன்முறை சம்பவம் காதல் சார்ந்த பிரச்சினை ஒன்றினால் பல நாட்களாக இடம்பெற்று வந்ததாக தெரிய வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதியின் சகோதரர்களுக்கும் இளைஞனுக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து  அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள யுவதியின் குடும்பத்திற்கு சொந்தமான கடைக்கு மர்ம நபர்கள் சிலர் பெற்றோல் குண்டு ஒன்றை வீசியுள்ளனர்நேற்றுமுன்தினம் சில இளைஞர்கள் குடி போதையில் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பரஸ்பரம் தாக்குதலுக்கு உள்ளாகி இரு பகுதியினரும் காயமடைந்துள்ளனர்இந் நிலையில் குறித்த பகுதியில் தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் பல சிசிரிவி  காணொளிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்ட போதிலும்,இதுவரை எவரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement