• Oct 30 2024

பள்ளியில் மலர்ந்த காதல்..!3 காதலர்களால் சிறுமியருக்கு நேர்ந்த கொடுமை..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 1:26 pm
image

Advertisement

பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் கடந்த வாரம் சூக்கிரி எல்லையை பார்வையிடுவதற்குச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர்,மூன்று காதலர்களும் மாணவிகளை  அருகிலுள்ள காட்டுக்குள்  அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த மாணவிகள் , பாடசாலைக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிவிட்டு சென்றுள்ள நிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிலையில்,  மாணவிகள் இரண்டரை மணியளவில்  தத்தமது வீடுகளுக்கு திரும்பிய வேளை அவர்களிடம் விசாரித்த போது மேற்படி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தை செய்ததை தொடர்ந்து முறைப்பாட்டின் பிரகாரம், மூன்று காதல் ஜோடியும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

17 வயதுக்கு உட்பட்ட காதலர்கள் மூவரையும்  மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் மலர்ந்த காதல்.3 காதலர்களால் சிறுமியருக்கு நேர்ந்த கொடுமை.samugammedia பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் கடந்த வாரம் சூக்கிரி எல்லையை பார்வையிடுவதற்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர்,மூன்று காதலர்களும் மாணவிகளை  அருகிலுள்ள காட்டுக்குள்  அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த மாணவிகள் , பாடசாலைக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிவிட்டு சென்றுள்ள நிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நிலையில்,  மாணவிகள் இரண்டரை மணியளவில்  தத்தமது வீடுகளுக்கு திரும்பிய வேளை அவர்களிடம் விசாரித்த போது மேற்படி சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தை செய்ததை தொடர்ந்து முறைப்பாட்டின் பிரகாரம், மூன்று காதல் ஜோடியும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 வயதுக்கு உட்பட்ட காதலர்கள் மூவரையும்  மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement