• May 17 2024

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு - புயல் எச்சரிக்கை!

Chithra / Dec 7th 2022, 7:05 am
image

Advertisement

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை  படிப்படியாக புயலாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த புயலானது நாளைய தினத்துக்குள் வட-தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைகளை நெருங்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு - புயல் எச்சரிக்கை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை  படிப்படியாக புயலாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இந்த புயலானது நாளைய தினத்துக்குள் வட-தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைகளை நெருங்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement